டெல்லி: இந்தியாவின் தனியார் வங்கித்துறையின் முன்னணி வங்கி நிறுவனமான ஆக்சிஸ் வங்கி தனது விளம்பர தூதராக சென்னை எக்ஸ்பிரஸ் பட வெற்றி நாயகி தீபிகா படுகோனே-யை அறிவித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் முன்றாவது கட்ட விளம்பர பிரச்சாரத்தில் "படுத்தி கா நாம் ஜிந்தகி" ஆதாவது வளர்ச்சியே வாழ்கை என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்து வருகிறது இதற்கு தீபிகா படுகோனே தலைமை வகித்து நடத்தி வருகிறார்.
விளம்பரம்
இந்த விளம்பர பிரச்சாரத்தை லோவி லின்டாஸ் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியின் சேவை மற்றும் அதன் மூலம் கிடைக்கு வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வடிவமைக்கிறது, மேலும் இந்த விளம்பரங்களில் தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்த விளம்பரங்களை டிரைக்ட் செய்வது ஹிந்தி பட இயக்குனரான கெளரி ஷின்டே.
ஆக்சிஸ் வங்கி
இந்த அறிவிப்பு கூட்டத்தில் பேசிய ஆக்சிஸ் வங்கியின் சில்லறை வங்கி பரிவின் தலைவர் ராஜீவ் அனந்த "நிறுவனத்தின் அடுத்த வெளிவரும் அனைத்து விளம்பரங்களும் "படுத்தி கா நாம் ஜிந்தகி" என்ற கருத்தை மையமாக கொண்டே வெளிவரும்" என அவர் தெரிவித்தார்.
தீபிகாவும்... ஆக்சிஸ் வங்கியும்..
மேலும் அவர் தீபிகாவை பற்றி கூறும்போது, தீபிகா தற்போது இந்திய சினிமா உலகின் முன்னணி நாயகியாக உள்ளார், மேலும் இவரின் முகம் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களுக்கும் தெரிந்த ஒன்று. இதுமட்டும் அல்லாமல் இவர் யுத் ஐகான், இந்த பெயர் மற்றும் தகுதி எங்கள் நிறுவனத்தின் சேவைகளை மக்கள மத்தியில் கொண்டு செல்ல எதுவாக அமையும் என்று எதிர் நம்புகிறோம் என்று ராஜீவ் தெரிவித்தார்.
தீபிகா படுகோனே
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தீபிகா படுகோனே " இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஆக்சிஸ் வங்கியின் வளர்ச்சியில் எனது பங்கும் உள்ளது என்பதை நான் பெருமையாகவும், இதில் எனக்கு உள்ள பொறுப்பையும் உணர்கிறோன் என தெரிவித்தார்."
வங்கி சேவை
ஆக்சிஸ் வங்கி இந்தியாவில் 2,402 வங்கி கிளைகளும், 12,922 ஏடிஎம் முனையங்களும் கொண்டு செயல்படுகிறது. மேலும் இந்தியாவின் 1,636 நகரங்கள் மற்றும் நகராட்சிகளிலும் தனது வங்கிச் சேவையை அளிக்கிறது.
வெளிநாடுகளில் ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி இந்தியா மட்டும் அல்லாமல் பிரட்டன், சிங்கப்பூர், ஹாங்காங், ஷங்காய், கொழுப்பு, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் தனது வங்கிச் சேவையை அளித்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications