சிக்கா தலைமையில் 12 பேர் கொண்ட குழு!! அதிரடியாக செயல்படும் இன்போசிஸ்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக விஷால் சிக்கா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 12 முக்கிய அதிகாரிகளைக் கொண்ட டீம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சிஇஓ மற்றும் சிஓஓவுக்கு அடுத்தபடியான மூன்றாவது வரிசை நிர்வாகக் குழுவை இன்போசிஸ் இப்போதுதான் முதல் முறையாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் Dual President என்ற இரண்டு தலைமையை விட்டு வெளியே வந்துள்ளது.

இந்த முறை மூலம் டாப் லெவல் அதிகாரிகள் யாரும் அவ்வளவு எளிதில் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேற முடியாது. கடந்த ஒரு வருடத்தில் இந்த நிறுவனத்தின் 11 உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்திசாலித்தனமான செயல்

புத்திசாலித்தனமான செயல்

இன்போசிஸ் நிறுவனத்தின் சிஓஓவாக யு.பி. பிரவீண் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். சிஇஓ-சிஓஓ ஆகிய இரண்டு வேறு பதவிகள் இருப்பது நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான வடிவமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு புத்திசாலித்தனமான மூவ்தான் என்றும் தெரிகிறது.

சிஇஓ-சிஓஓ

சிஇஓ-சிஓஓ

சேவைத் துறைக்கு சிக்கா புதியவர் என்பதால் சிஓஓ அவருக்கு மிகவுப் பக்கபலமாக இருப்பார். வர்த்தகம், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் சில பொறுப்புக்களை சிக்கா பார்த்துக் கொள்ளும்போது, மற்ற முக்கியப் பொறுப்புக்களை ராவ் கவனித்துக் கொள்வார்.

முக்கியப் பொறுப்புகள்

முக்கியப் பொறுப்புகள்

12 சீனியர் வைஸ்-பிரஸிடெண்ட்டுகளுக்குப் பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் முக்கியப் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய முடிவுகளும்.. பதவிகளும்..
 

புதிய முடிவுகளும்.. பதவிகளும்..

இதுபோன்ற பெரும் மாற்றத்தை இப்போதுதான் முதல் முறையாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளதால், இதில் எந்தவிதமான சொதப்பலும் இல்லாமல் இவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா

அமெரிக்கா "தல"

இன்போசிஸ் சிஇஓ பதவிக்கு அடிபட்ட பெயர்களில் சந்தீப் டாட்லானியும் ஒருவர். அவருக்கு 'அமெரிக்கத் தலைமை' பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிரசாத் திருக்குட்டம்

பிரசாத் திருக்குட்டம்

கடந்த மாதம் இந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி, டெல் நிறுவனத்தில் சேர்ந்துள்ள பிரசாத் திருக்குட்டம் தான் இந்தப் பொறுப்பை வகித்து வந்தார்.

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

இன்போசிஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய வர்த்தகத்தை கவனித்து வந்த ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி, அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys unveils new leadership team

Days after announcing the new CEO and Managing Director-designate, Infosys, on Monday, made official its third-rung of leadership, which includes 12 executive vice-presidents.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X