ஹைதெராபாத்: இந்திய தபால் துறை கடந்த 2 வருடங்களாக தனது சேவையை பெருக்கி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தபால்துறை அந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் லாஜிஸ்டிக்ஸ் சேவையை துவக்கியுள்ளது. இதனால் தபால் துறை மீண்டும், வர்த்தக ரீதியில் லாபகரமாகவும், விநியோகத்தில் சிறப்புடன் செயல்பட உள்ளது.
முதற்கட்டமாக தபால் துறை, லாஜிஸ்டிக்ஸ் சேவையை ஹைதெராபாத் வழியாக சென்னை, பெங்களூரு, விசாகப்பட்டினம் அதிலாபாத் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.
விரைவான சேவை
இதுகுறித்து உதவி போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் எஸ்.வி.ராவ் அவர்கள் கூறுகையில் இந்த வழிதடங்களில் தற்போது 8 வாகனங்களை அமர்த்தியுள்ளோம். இதனால் வாடிக்கையாளருக்கும் தங்களது கடிதம், பார்சல் மற்றும் செய்தியை அதிவிரைவாக கொண்டு சேர்க்க முடியும் என அவர் தெரவித்தார்.
விலை
இச்சேவையில் ஹைதெராபாத் முதல் சென்னைக்கு அனுப்பப்படும் பொருட்களின் எடையை பொறுத்து கட்டணத்தில் 1 ரூபாய் முதல் 6.80 ரூபாய் வரை விலையில் மாற்றம் இருக்கும் எனவும் ராவ் அவர்கள் தெரிவித்தார்.
இலக்கு
இச்சேவை துவங்கிய முதல் நாள் 15 முதல் 20 கிலோ எடையை வரை உள்ள பார்சல்களை எதிர்பார்க்கிறோம். மேலும் சேவை செயல்பாட்டில் நிலை பெற்ற பின்பு இதன் எடை அதிகரிக்கவும் அதிகப்படியான வாய்ப்புள்ளது. இதனால் வருடத்திற்கு 10 கோடி அளவில் வர்த்தகம் செய்ய முடியும் என ஒரு பிரபல பத்திரிக்கைக்கு திரு.ராவ் பதில் அளித்தார்.
வங்கி சேவை
மேலும் தபால்துறை வங்கி சேவை அளிக்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் அளித்தது. இதை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி முழுமையான வங்கி அல்லாமல் மாறுபட்ட வங்கியாக செயல்பட ரிசர்வ் வங்கி தபால் துறையிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications