தடையற்ற வர்த்தகத்தை செயல்படுத்த இந்தியா- ரஷ்யா பேச்சுவார்த்தை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா, ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் விரைவில் நேரடி வர்த்தகத்திற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாகியுள்ளன. இந்த நேரடி வர்த்தகத்தின் மூலம் இருநாடுகள் மத்தியில் நட்புறவும், வர்த்தக ரீதியில் அதிகப்படியான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும்.

இந்த வாய்ப்புக்கள் குறித்து இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளன. இத்தகைய வாய்ப்புகள் மூலம் இந்திய நாணய சந்தை வலிமை அடையும். மேலும் அன்னிய நாணயங்களின் இருப்பு தொடர்ந்து அதிகரிக்கும்.

இந்த ஒப்புந்தம் தொடர்பான முறையான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சுஷ்மா ஸ்வராஜ்

சுஷ்மா ஸ்வராஜ்

மேலும், இதற்கான ஒப்பந்தத்தில் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ரஷ்யத் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

ஹைட்ரோகார்பன்கள், அணு ஆற்றல், மருத்துவம், உரங்கள், வைரங்கள், சமையல் நிலக்கரி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திதம் ஆகிய துறைகளில் வர்த்தக அதிகரிக்க இந்த ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

ஏற்றுமதி இறக்குமதி

ஏற்றுமதி இறக்குமதி

இந்திய தூதரகத்தின் தகவல் படி கடந்த 2012ஆம் ஆண்டில் இந்தியா - ரஷ்யா இடையே நடந்த வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 6.275 பில்லியன் டாலர் மதிப்புடையதாகும். இதில் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 2.077 பில்லியன் டாலர், இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளின் மதிப்பு 4.197 பில்லியன் டாலராகும்.

வர்த்தக வளர்ச்சி

வர்த்தக வளர்ச்சி

மேலும் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சியை மட்டுமே காண்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் 30.56% 7.4%, 14.41%, 4.9%, 24.5% என்ற அளவில் வர்த்தகம் வளர்ச்சியை சந்தித்து வருகிறது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

2012ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து மருந்துகள், எல்க்ரிக்கல் சாகனங்கள், ஆடை மற்றும் ஜவுளி, இறும்பு மற்றும் எஃகு, காஃபி, டீ, புகையிளை ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி

இறக்குமதி

இதே காலகட்டத்தில் ரஷ்யாவில் இருந்து கப்பல், உரங்கள், அணு உலைகள், கொதிகலன்கள், இரும்பு, பேப்பர் ஆகியவை அதிகளவில் இறக்குமதி செய்துள்ளோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India, Russia to conduct study on free trade with Belarus, Kazakhstan

India and Russia have decided to have a joint feasibility study on free trade customs union between India, Russia, Belarus and Kazakhstan.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X