மும்பை: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், தற்போது டேப்லெட் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டிஜிஃபிளிப் என்ற பெயரில் இது விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிஃபிளிப் பெயரில் ஏற்கனவே கடந்த 2012 முதல் ஹெட்போன், ஸ்பீக்கர், பென் டிரைவ் உள்ளிட்ட ஏராளமான எலெக்ட்ரானிக் சாதனங்களை ஃபிளிப்கார்ட் நிறுவனம் விற்று வருகிறது. இந்த நிறுவனம் ஸ்மார்ட்போன் தயாரிப்பிலும் இறங்கும் என்று சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் கிளம்பின.
இந்த வரிசையில் டேப்லெட் மட்டும்தான் பாக்கி என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, இதோ அதற்கான அறிவிப்பும் வந்து விட்டது.
ஆப்பிள், சாம்சங்
ஆப்பிள் மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் தான் உலக அளவில் டேப்லெட் தயாரித்து வந்தன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் உலகப் புகழ்பெற்றது அனைவரும் தெரிந்ததே! அதேபோல் சாம்சங் நிறுவனமும் பல மாடல்களில் டேப்லெட்டுகளைத் தயாரித்து, விற்றுக் கொண்டிருக்கிறது.
அமேசான்
இதையடுத்து, இதே சில்லறை வர்த்தக உலகில் ஜாம்பாவான் என்று போற்றப்படும் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் ஃபயர் எச்டிஎக்ஸ் வெளியாகி டேப்லெட் ஆர்வலர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில், விற்பனைக்கு வந்த ஒன்பதே மாதங்களில் மளமளவென்று அவை விற்றுத் தீர்ந்தன.
கடும் போட்டி
இப்படி விற்பனையில் சக்கைபோடு போட்ட அமேசானின் டேப்லெட்டுக்கு இணையாக (காஃபி அடிக்கும்) ஃப்ளிப்கார்ட் ஈடு கொடுக்க முடியுமா? மேலும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய விற்பனைகளை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியையும் சமாளிக்க முடியுமா? என்று பல கேள்வி எழுந்துள்ளது.
உள்ளூர் போட்டியும் கூட
டேப்லெட் விற்பனையில் உள்ளூர் நிறுவனங்களின் போட்டிகளையும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் சந்திக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன்னுடைய டேப்லெட்டுகளை ரூ.4,999 முதல் விற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மிந்த்ராவை மடக்கி...
ஆனாலும், எதையும் சாதிக்க முடியும் என்றே ஃபிளிப்கார்ட் நம்புகிறது. முதல் நடவடிக்கையாக, இந்தியாவின் மிகப்பெரும் ஃபேஷன் போர்ட்டலான மிந்த்ராவை அது வளைத்துப் போட்டுள்ளது. அமேசான் ஆடை விற்பனையில் இறங்க லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள சில ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களை கைபற்றியைதை தொடர்ந்து, ஃபிளிப்கார்ட் மிந்த்ராவை கைபற்றியது.
'ஃபிளிப்கார்ட் ஃபர்ஸ்ட்' துவக்கி...
மேலும் 'ஃபிளிப்கார்ட் ஃபர்ஸ்ட்' என்ற சேவை நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது. இதன்மூலம் வருடாந்திர சந்தாத் தொகை செலுத்தும் தன் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சேவையை அமேசான் அமெரிக்காவில் தனது வாடிக்கையாளருக்கு வழங்கி வந்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications