டெல்லி: முன்னாள் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட ஆதார் அடையாள அட்டைத் திட்டம் மத்திய அரசால் விரைவில் கைவிடப்பட உள்ளது. அதற்குப் பதிலாக தேசிய மக்கள்தொகைப் பதிவு (National Population Register, NPR) என்ற திட்டத்தை அரசு கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரவிக்கிறது.
2009ஆம் ஆண்டு ஆதார் திட்டம் கொண்டு வரப்பட்டது, இத்திட்டத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான நந்தன் நீலகேனி தலமைவகித்து நடத்தி வந்தார். இத்திட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு சுமார் 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
மூடுவிழா
தற்போதைய அரசு தேசிய மக்கள்தொகைப் பதிவு திட்டத்தை வலியுறுத்தி வருவதால், ஆதார் திட்டத்திற்கு விரைவில் மூடுவிழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், என்பிஆர் திட்டத்தை முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். இந்தத் திட்டத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் அவர். ஆதார் திட்டத்தை
போகுமா? போகாதா?
ஆனால், இந்தப் புதிய திட்டத்தை ஆதார் திட்டத்துடன் சேர்க்கப் போகிறாரா, ஆதார் திட்டம் முழுவதுமாகக் கைவிடப்படுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஆதார் குளறுபடிகள்
ஆதார் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். எந்தவிதமான சட்ட ஆலோசனையையும் மேற்கொள்ளாமல், நாட்டு மக்களின் கைரேகைகள் மற்றும் கண்களைப் பதிவு செய்யும் உரிமைகளைத் தனியாரிடம் விட்டதும் ஒரு பெரிய கூத்து. ஆதார் அட்டை வைத்திருப்பதைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சிங்-சிதம்பரம்
இந்த ஆதார் அட்டை குறித்து பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் எழுந்துள்ளன. ப. சிதம்பரம் உள்துறை அமைச்சரான பிறகு, என்பிஆர் திட்டத்துடன் ஆதார் திட்டத்தை இணைப்பது குறித்தும் மன்மோகன் சிங் ஒரு இணக்கத்திற்கு வந்தார்.
வாஜ்பாய் அரசின் என்பிஆர்
எனவே, மிகவும் குளறுபடியான இந்தத் திட்டம் தேவைதானா என்று மத்திய அரசு யோசித்து வருகிறது. வாஜ்பாய் தலைமையிலான முன்னாள் பாஜக அரசிலேயே இந்தப் புதிய என்பிஆர் திட்டம் தீட்டப்பட்டது என்பது மிகவுப் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications