டெல்லி: இந்தியாவின் முதல் பெரிய ஐ.டி. பார்க்கான டெக்னோபார்க்கில் (Technopark) 2014-16க்குள் 45,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தியாவில் உள்ள ஐ.டி. பார்க்குகளிலேயே டாப்பாக வர வேண்டும் என்ற நோக்கில் டெக்னோபார்க் இத்தனை பணியிடங்களை நிரப்புவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 24 ஆண்டுகளில் இங்கு பணிபுரிபவர்களின் எண்ணிக்கை (45,000) அடுத்த இரு ஆண்டுகளிலேயே இரு மடங்காக்கப்படும் என்று டெக்னோபார்க்கின் சிஇஓ கிரிஷ் பாபு தெரிவித்துள்ளார். இதையடுத்து, மொத்தம் 90,000 பேர் நேரடியாகவும், 3.5 லட்சம் பேர் மறைமுகமாகவும் இங்கு பணிபுரிவார்கள்.
புதிய டெக்னோபார்க்
மேலும் புதிய டெக்னோபார்க்கின் 25 லட்சம் சதுர அடிகளில் கட்டப்பட்டு வரும் பேஸ் 1 மற்றும் பேஸ் 2 கட்டடங்கள் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையும்.
வெள்ளிவிழா
டெக்னோபார்க் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு ஏற்கனவே 45,000 பேர் 330 சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
சொந்த அலுவலகங்கள்
டிசிஎஸ், இன்போசிஸ், யூஎஸ்டி குளோபல், டாடா எல்க்ஸி மற்றும் ஐபிஎஸ் ஆகிய நிறுவனங்கள் டெக்னோபார்க்கில் தங்கள் சொந்த அலுவலகங்களைக் கட்டி வருகின்றன. மேலும், மற்ற நிறுவனங்களுக்காக டெக்னோபார்க் மூன்று தனித்தனி கட்டடங்களைக் கட்டி வருகிறது.
ஏற்றுமதி
டெக்னோபார்க் ஐ.டி. நிறுவனங்கள் மூலம் 2013-14ல் ரூ.5,000 கோடிக்கு சாஃப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2012-13ல் ஏற்றுமதி மதிப்பு ரூ.3,500 மட்டுமே. இந்தக் காலக்கட்டத்தில் 11 லட்சம் சதுர அடியில் பல அலுவலகங்களை டெக்னோபார்க் கட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications