கொச்சி: கேரளாவில் வரும் செப்டம்பர் 12ல் இளம் சிறுதொழில் முனைவோருக்கான (YES) மாநாடு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 12ம் தேதி கேரள சிறுதொழில் முனைவோர் தினமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்த ஆண்டு இது ஒரு முக்கிய மாநாடாகக் கருதப்படுகிறது.
2,000 சிறுதொழில் முனைவோர்
கேரள தொழில் வளர்ச்சிக் கழகம், டெக்னோபார்க், இன்போபார்க், கின்ஃப்ரா, ஸ்டார்ட் அப் வில்லேஜ், டை கேரளா மற்றும் சிஐஐ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தவுள்ள இந்த மாநாட்டில் சுமார் 2,000 இளம் சிறுதொழில் முனைவோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஊக்குவிப்பு
ஐ.டி. மற்றும் ஐ.டி. அல்லாத தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனவுகளை நனவாக்க...
சிறுதொழில் தொடங்கும் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் அவர்களுக்கு இந்த மாநாடு உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ் அமைப்பு
இளைஞர்கள் மத்தியில் சிறுதொழில் தொடங்கும் சிந்தனைகளை வளர்க்கும் விதமாகவும், கேரளாவின் அனைத்துத் துறை வளர்ச்சிகளிலும் சிறுதொழில்கள் முக்கியத்துவம் பெறும் விதமாகவும் இந்த எஸ் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சிறுதொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் ஆர்வத்துடன் அத்தகைய தொழிகளைத் தொடங்கவும் இந்த அமைப்பு வழி காட்டுகிறது.
எஸ் லோகோ
எஸ் அமைப்பின் லோகோவை கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடந்த 18ம் தேதி தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு...
ஏற்கனவே, கடந்த 2012ல் கேரள அரசு அறிவித்திருந்த மாணவர்களுக்கான சிறுதொழில் கொள்கை அம்மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications