ஹைதராபாத்: விஜயவாடாவை தலைமையிடமாகக் கொண்டு ஏர்கோஸ்டா விமான நிறுவனம் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் ஹைதராபாதில் இருந்து மதுரைக்கு புதிய சேவையை இயக்க துவங்குகிறது.
இந்நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்களான சென்னை, பெங்களுரூ, ஹைதரபாத், டெல்லி, மும்பை போன்ற 9 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தனது விமான சேவையை இயக்கி வருகிறது. இந்நிறுவநம் நாள்தோறும் சுமார் 34 விமான பயணங்களை மேற்கொள்கிறது.
சென்னையை அடுத்து மதுரை
இந்நிறுவனம் ஏற்கனவே சென்னைக்கு விமான சேவை அளித்து வந்தது. இந்நிலையில் மதுரையில் இருந்து ஹைதராபாத்திற்கு அதிகளவில் வாடிக்கையாளர்களை பெறுவதை உணர்ந்த இந்நிறுவனம் தனது சேவையை மதுரை வரை விரிவாக்கம் செய்தது.
ஜூலை 3 முதல்
கோவில் நகரமான மதுரைக்கு இனி ஹைதராபாதிலிருந்து நேரடியாக பயணிக்க முடியும். இந்த சேவை வரும் ஜூலை 3 ஆம் தேதியிலிருந்து துவக்கி வைக்கப்படுகிறது.
புதிய சேவை
இதேபோல் இந்நிறுவனம் விஜயவாடாவிலிருந்தும், ஹைதராபாதிலிருந்தும் சென்னைக்கு வரும் ஜூலை 4 ஆம் தேதி முதல் புதிய வழித்தடத்தில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் லிங்காமனானி தெரிவித்துள்ளார்.
போட்டியை எதிர்கொள்ள
இந்தியாவில் பல விமான நிறுவனங்கள் உள்நாடு விமான சேவை அளித்து வந்த நிலையில் போட்டியை சமாளிக்க விமான நிறுவனகங்கள் சிறு நகரங்களையும் இணைக்கும் வகையில் தனது சேவையை வரிவாக்கும் செய்ய துவங்கியுள்ளது அதில் இந்த ஏர்கோஸ்டா நிறுவனமும் ஒன்று.


Click it and Unblock the Notifications