1.56 இலட்சம் மில்லியனர்களின் தாயகமாக இருக்கும் "ஏழை" நாடு இந்தியா!

லண்டன்: பொதுவாக இந்தியா ஒரு ஏழை நாடாக உலக நாடுகள் மத்தியில் சித்தரிக்கப்பட்டாலும், இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 1.56 இலட்சம் மில்லியனர்களையும், மேலும் 3000 பேரை இந்த பிரசித்தி பெற்ற பணக்காரர்கள் குழுவில் சேர்க்கும் வல்லமையும் கொண்ட நாடாக இந்தியா 2013-ம் ஆண்டில் உருவாகியுள்ளது. மிகவும்-பணக்காரர்களாக இருக்கும் மக்களைக் கொண்டிருக்கும் பட்டியலில், இந்தியா உலகளவில் 16-வது இடத்தைப் பெற்றுள்ளது.

கேப்ஜெமினி மற்றும் RBC வெல்த் மேனேஜ்மென்ட் ஆகியவர்களால் வெளியடப்பட்ட உலக செல்வவள அறிக்கை 2014 (World Wealth Index)-ல், இந்தியாவில் 2013-ம் ஆண்டில் 1,56,000 பேர் பெரும்பணக்காரர்களாக இருக்கிறார்கள், இந்த எண்ணிக்கை 2012-ம் ஆண்டு 1,53,000 ஆக இருந்தது குறிப்பிடதக்கது.

16வது இடம்

16வது இடம்

உலகளவில் அதிக சொத்து மதிப்புடைய தனிநபர்களின் (High Net Worth Individuals) மக்கள் தொகையைப் பொறுத்த வரையில் இந்தியா 16-வது இடத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்கா முதல் இடம்

அமெரிக்கா முதல் இடம்

இந்த பட்டியலில் 40,06,000 பேரை கொண்டிருக்கும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் (23,27,000), ஜெர்மனி (11,30,000) மற்றும் சீனா (7,58,000) ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

60% பணக்காரர்கள்

60% பணக்காரர்கள்

பட்டியலின் முதல் 4 இடங்களில் உள்ள நாடுகளில் மட்டுமே, உலகப் பெரும்பணக்காரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (59.9% பேர்) உள்ளனர். 52.62 டிரில்லியன் சொத்து மதிப்புடன், 1.76 மில்லியன் பெரும்பணக்காரர்களைக் கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

எண்ணிக்கை உயர்வு

எண்ணிக்கை உயர்வு

இந்த ஆண்டில் அதிக சொத்து மதிப்புடைய தனிநபர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+