டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் அடுத்த இரண்டு வருடங்களில் 30,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நடந்த இந்நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் 70,000 முதலீடு செய்ய திட்டமிட்டத்தில் ஒரு பகுதி தான் இந்த 30,000 கோடி ரூபாய். இந்த நிதியை நிறுவனத்தின் சேவையை வரிவாக்கவும், நெட்வொர்க்கை வலுபடுத்தவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முதலீடு அவசியமற்றது
ரிலையன்ஸ் நிறுவனம் இன்போகாம் நிறுவனத்தில் முதலீடு செய்வது சிறந்த முடிவாக இருக்காது, ஏனெனில் கடந்த 12 மாதங்களாக இந்நிறுவனம் பெறும் லாபத்தை எதும் அளிக்கவில்லை.
ரிலையன்ஸ் ஜியோ
இந்நிலையிலும் இன்போகாம் நிறுவனம் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. இந்நிறுவனம் லாபம் அதிகளவில் கொடுக்கவில்லை என்றாலும், நிறுவன சொத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நாம் ஒப்புக்கொள்ள வோண்டும்.
4ஜி சேவை
சில மாதங்களுக்கு முன்பே இந்நிறுவனம் இந்தியாவில் 4ஜி சேவையை அளிக்க துவங்கியுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இந்த 70,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவது வரிவடைய உள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ்
முதற்கட்டமாக இந்நிறுவனம் இந்தியாவின் 5,000 டவுன் மற்றும் நகரங்களை கவர் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவின் 215,000 கிராமங்களை அடைய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications