ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஒட்டிக் கொண்ட ஏர்இந்தியா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சரிவில் தத்தளிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் ஸ்டார் அலையன்ஸ் நிறுவனம் இணையவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு செவ்வாய்கிழமை இந்நிறுவனங்கள் அறிவித்தது. பல வருடமாக ஏர் இந்தியா நஷ்டத்தில் செய்ல்பட்டு வருவதால் லாபத்தை அதிகரிக்க ஏர்இந்தியா ஸ்டார் அனையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 

இரு நிறுவனத்தின் கூட்டமைப்பு மூலம் ஏர்இந்தியாவின் வருமானம், தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் அடுத்த ஆண்டுக்குள் 5 சதவீத வருமான வளர்ச்சியை நோக்கி செயல்பட இந்த கூட்டணி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, ஏர் இந்தியாவின் செயல்பாடுகள் உலகின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்றடையும்.இதற்கான ஒப்பந்தம் லண்டனில் இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் கையெழுத்துயிடப்பட்டது.

புதிய முடிவுகள்

புதிய முடிவுகள்

மேலும், இந்த அலையன்ஸ் இணைப்பைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் தனியார்மயமாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டார் அலையன்ஸ்

ஸ்டார் அலையன்ஸ்

ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே உலகம் முழுவதிலும் 26 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அங்கத்தினர்களாக உள்ளன. தற்போது ஏர்இந்தியா 27வது உறுப்பினர்.

வாய்ப்பு நழுவியது

வாய்ப்பு நழுவியது

கடந்த 2011ஆம் ஆண்டிலேயே ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா நிறுவனத்தை இணைக்கும் முயற்சி தோல்வியடைந்தது. அந்த ஆண்டு ஏர் இந்தியா பல சொதப்பல்களைச் சந்தித்தது. சம்பளத் தட்டுப்பாடு, விமானிகள் ஸ்டிரைக், பல விமானங்கள் ரத்து என்று பல நெகட்டிவ்வான சம்பவங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தை இக்கட்டில் விட்டன. பலத்த நஷ்டமும் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த நிறுவனத்துக்கு ஸ்டார் அலையன்ஸ் ஓட்டளிக்கவில்லை.

மீண்ட சொர்க்கம்
 

மீண்ட சொர்க்கம்

ஆனால், அதற்கு அப்புறம் ஏர் இந்தியா நிறுவனம் சுதாரித்துக் கொண்டது. இந்த 3 ஆண்டுகளில் அதன் செயல்பாடுகள் மீண்டும் நல்ல நிலைமையை அடைந்துள்ளன.

ஓட்டளித்த ஸ்டார் அலையன்ஸ்

ஓட்டளித்த ஸ்டார் அலையன்ஸ்

இதையடுத்து, நேற்று நடந்த ஓட்டெடுப்பில், ஏர் இந்தியாவுக்கு ஸ்டார் அலையன்ஸ் ஓட்டளித்துள்ளதாகத் தெரிகிறது. ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்துடன் ஏர் இந்தியா இணைவதற்கான அறிவிப்பை இரு நிறுவன அதிகாரிகளும் இன்று மாலைக்குள் அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

ரூ.3,500 கோடி அதிக வருவாய்

ரூ.3,500 கோடி அதிக வருவாய்

ஸ்டார் அலையன்ஸ்-ஏர் இந்தியா இணைப்புக்குப் பின்னர் ஏர் இந்தியாவில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 5 சதவீதம் உயரும் என்றும், ஆண்டு வருவாய் 2 முதல் 3 சதவீதம் வரை (ரூ.3,500 கோடி வரை) அதிகரிக்கும் என்றும் தெரிகிறது. கடந்த 2013-14ல் ஏர் இந்தியாவின் ஆண்டு வருமானம் ரூ.19,000 கோடி ஆகும்.

தனியார்மயம்?

தனியார்மயம்?

மேலும், ஸ்டார் அலையன்ஸ்-ஏர் இந்தியா இணைப்பைத் தொடர்ந்து, விரைவில் ஏர் இந்தியா நிறுவனம் தனியார்மயமாகும் என்ற தகவல்களும் கிளம்பியுள்ளன. தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த விஷயத்தில் அவசரம் காட்டவில்லை. ஆனாலும், இந்த இணைப்புக்குப் பிறகு, ஏர் இந்தியாவின் செயல்பாடுகளும் வருவாயும் நன்றாக அதிகரிக்கும் பட்சத்தில் அதை ஒரு நல்ல விலைக்குத் தனியாரிடம் விற்றுவிட்டாலும் ஆச்சரியமில்லை!

தனியார்மயமானால்...

தனியார்மயமானால்...

1) அது மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கைப்பாவையாக இருக்காது. அதன் தொழில் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.

2) அது மத்திய அரசிடம் எந்தவிதமான உதவிகளையும் கேட்காது. ஏற்கனவே இந்த நிறுவனத்திற்கு ரூ.12,200 கோடியை ஈக்விட்டியாக அரசு அளித்துள்ளது.

3) அது நல்ல லாபத்தில் இயங்கும். 2014-15ல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சுமார் ரூ.6,000 கோடி வரை நஷ்டம் ஏற்படலாம் என்று ஆசியா பசிபிக் ஏவியேசன் மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India joins Star Alliance group

Air India Ltd has joined the Star Alliance group of carriers, a spokesman said on Tuesday, a move that could help boost revenues at the loss-making state-run airline.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X