மும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மற்றும் பத்திர விற்பனை கடந்த வாரம் துவங்கியது. இதன் விற்பனை புதன்கிழமை காலை முடிந்த நிலையில் இந்நிறுவனம் இந்தி விற்பனையின் மூலம் சுமார் 6,100 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நான்காவது தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பங்கு விற்பனையிந் மூலம் ரூ.4,800 கோடியும், நீண்ட கால முதலீடு நோக்கில் அமெரிக்க டாலர் முதலீடாக ரூ.12,000 கோடியும் பெற்றுள்ளது. மேலும் பத்திர விற்பனை மற்றும் விநியோகத்தின் மூலம் ரூ.1,300 கோடி நிதியை பெற்றுள்ளது.
பங்கு விற்பனை
அனில் அம்பானி தலைமை வகிக்கும் இந்நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய் கிழமை வர்த்தக முடிவில் 142.13 ரூபாய்க்கு முடிவடைந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 8.67 கோடி பங்குகளை விற்க முடிவு செய்தது.
பங்கு நிலை
கடந்த ஒரு மாத காலத்தில் இந்நிறுவனத்தின் பங்கு விலை கடுமையான ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நிறுவந பங்கு விற்பனை செய்தியை கேட்ட முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் சிறப்பாக செயல்பட துவங்கின இதனால் செவ்வாய் கிழமை முடிவில் இந்நிறுவன பங்குகள் 151.35 ரூபாய்க்கு முடிவடைந்தது.
தலைக்கு மேல் இருக்கும் கடன்
மார்ச் 31ஆம் தேதியின் தகவல் படி இந்நிறுவனத்தின் கடன் தொகை மொத்தம் 40,178 கோடி ரூபாய். மேலும் இதற்கான வட்டி பல வருடங்களாக நிலுவையில் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் செலவு 749 கோடி ரூபாயில் இருந்து 907 கோடியாக உயர்ந்துள்ளது.
கடன் அளவு குறைப்பு
பல வருடமாக இந்நிறுவன தனது கடன் மதிப்பை குறைக்க திண்டாடி வருகிறது. இந்த பங்கு விற்பனையில் மூலம் கிடைத்த நிதியை கொண்டு இந்நிறுவனம் தனது கடந் அளவை அதிகளவில் குறைக்க திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications