ரூ.40,000 கோடி மதிப்புள்ள சாலை திட்டங்கள் ஒப்புதல்!! தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை..

டெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை முக்கிய கடமையாக கொண்டு செயல்படும் மத்திய அரசு, சுமார் 40,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புத்தல் அளித்துள்ளது. மேலும் இத்திட்டங்களை அடுத்த 2 வருடத்திற்கு செயல்படுத்தி முடிக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கிறது. இத்திட்ட ஒப்புதல்களில் தென் இந்தியாவில் ஒரு ஒன்று கூட இல்லை எந்பது வருத்தமான செய்தி.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

இப்பகுதியில் 2 வழி சாலைகள் மற்றும் 4 வழி சாலைகளை லேக் மற்றும் லாடாக் பகுதிகளை இணக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும், இப்பணிகளில் மாநில அரசு உதவி அதிகளவில் தேவைப்படுவதாகவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

ரூ.15,000 கோடி திட்டம்

ரூ.15,000 கோடி திட்டம்

மேலும் இந்த சந்திப்பில் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய பகுதிகளில் சாலையை பணிகளுக்காக சுமார் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உத்தரகண்ட்

உத்தரகண்ட்

இம்மாநிலத்தில் வெள்ளத்தால் சாலைகள் மிகவும் மோசமான நிலைக்கு உள்ளகிறது, இதனை தவிர்கும் முறையில் புதிய முறையில் சாலை வழிகளை அமைக்கவுள்ளதாகவும், அதற்கு 6,000 நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கட்காரி தெரிவித்தார்.

250 சாலை திட்டங்கள்

250 சாலை திட்டங்கள்

நிதின் கட்காரி பதவியேற்றிய பிறகு சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 250 சாலை திட்டங்களை ஆய்வு செய்துள்ளதார். இவைகளில் பல முக்கிய திட்டங்கள் நில கையகபடுத்துதல், காடு பாதுக்கப்பு மற்றும் சுற்றுபுற சூழல் பாதுகாப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

திட்ட துவக்கம்

திட்ட துவக்கம்

மேலும் ஒப்புதல் பெற்ற திட்டங்கள் அனைத்தும் அடுத்த முன்று மாதங்களில் துவக்க முடிவு செய்துள்ள இத்துறை இதற்கான ஒப்புதல் படிவங்களை மிகவும் வேகமாக செயல்படுத்தி வருகிறது.

நிதின் கட்காரி

நிதின் கட்காரி

இவர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாமல், கப்பல் துறை, ஊரக வளர்ச்சி துறை, பஞ்சாயத் ராஜ் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளையும் கவணித்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+