சென்னை: சாப்ட்வேர் ஏற்றுமதியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கும் வெறும் 8 - 10 சதவீத உயர்வை மட்டுமே அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் குறைந்த அளவு உயர்வை மட்டுமே கிடைக்கும் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதனர்.
சிடிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்ததால் குறைவான சம்பள உயர்வை மட்டுமே கொடுக்க முடியம் என இந்நிறுவனத்தின் தலைவர் கார்டன் ஜே. கோபார்ன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி
காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த வருடத்தை விட 3 சதவீதம் குறைந்கு 20 சதவீதமாக உள்ளது, ஆயினும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த வளர்ச்சி சிறப்பானது. இதனால் ஊழியர்களின் சம்பள உயர்வில் அதிகப்பாடியான பாதிப்பு எதும் இல்லை என்று இந்நிறுவனத்தின் நிதியியல் துறை உயர் அதிகாரிகள்
நிறுவன ஊழியர்கள்
இந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் உலக நாடுகளில் ஒடுட்டுமொத்தமாக சுமார் 140,000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் அதிக பணியாளர்கள் இந்தியாவில் தான் பணியாற்றி வருகிறார்னர் என்பது குறிப்பிடதக்கது.
ஆட்சேர்ப்பு
இந்நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு திட்டத்தில் எந்த விதமான மாற்றமும் இல்லை, கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பணியில் சேர்க்கப்படுவர் என கோபார்ன் தெரிவித்தார்.
விசா
மேலும் அவர் நிறுவனம் இந்திய பணியாளர்களை அதிகளவில் அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கு அனுப்பி வருகிறது, இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் 20 மேற்ப்பட்ட பல்கலைகழகங்களில் இருந்து மாணர்வர்களை நிறுவனத்தில் சேர்த்து வருகிறோம், இதனால் பணியாளர்களின் இடமாற்றம் குறையும் என எதிர்பார்க்கிறோம் என்று இந்நிறுவனத்தின் சீஇஓ டிசோசா தெரிவித்தார்.
புதிய டெக்னாலஜி
காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் சந்தையில் வளர்ந்து வரும் சோஷியல்,மொபைல், அனல்ட்டிக்ஸ் மற்றும் கிளவுட் ஆகிய துறைகளை முக்கிய துவம் அளித்து செயல்பட்டு வருகிறோம்.
வங்கிகள்
இந்த நான்கு துறைகளும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை அளித்துள்ளது. தற்போது 3 வங்கிகளுக்கு இத்துறைகளில் சேவை அளித்து வருகிறோம் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications