பாதுகாப்புத் துறையில் 51% அன்னிய முதலீடு இந்தியாவின் நிலையை மாற்றியமைக்கு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அளவை குறைந்த பட்சம் 51 சதவீதத்திற்கு உயர்த்துவதன் மூலம், இந்தியா ஒரு முக்கியமான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகத் திகழும் என்றும், இறக்குமதி செய்யப்படும் ஆயுதங்களை சார்ந்திருப்பது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

'இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதத்திற்கு அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் பெருத்த மாற்றங்கள் ஏற்படலாம். நுண்ணிய தொழில்நுட்பங்களைப் பெற ஏதுவாக இருப்பதால், உள்நாட்டு நிறுவனங்கள் உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்வார்கள், மேலும் இந்தியாவை உலகின் பாதுகாப்பு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றுவார்கள்' என்று அரசிடமிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுத இறக்குமதி

ஆயுத இறக்குமதி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுமார் 8 பில்லியன்களுக்கு பாதுகாப்பு சாந்த ஆயுதங்களை இறக்குமதி செய்து வருகிறது. உலகிலேயே மிக அதிகமான அளவில் பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாகளில் இந்தியாவும் ஒன்று. இதுமட்டும் அல்லாமல் மிகவும் குறைந்த அளவே ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியா உள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகள்

பாதுகாப்பு விதிமுறைகள்

இதனால் அன்னிய முதலீட்டு அனுமதியால் உள்நாட்டு தொழில் நிறுவனங்களின் கவலைகள் குறித்து சொல்லும் போது, முன்மொழியப்பட்டுள்ள வரைவுக் குறிப்பில் இந்த சென்சிட்டிவ் ஆன துறைக்குப் போதுமான அளவு பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்னிய முதலீடு
 

அன்னிய முதலீடு

'பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்தினர் கட்டுப்படுத்தும் வகையில் கொடுப்பது அவர்களுக்கு மிகவும் ஊக்கமூட்டுவதாக இருப்பதால், அவர்கள் இந்தியாவிற்கு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவார்கள். இந்தியாவை தங்களுடைய உற்பத்தி மையமாக உருவாக்குவார்கள், மேலும், இங்கிருந்தே ஏற்றுமதிகளும் செய்வார்கள். இது வேலை வாய்ப்பையும், அதிகப்படியான வருவாயை உருவாக்கும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அமோகமான ஆதரவு

அமோகமான ஆதரவு

இத்திட்டத்தை குறித்து அரசாங்கம் பல்வேறு-நாடுகளின் அமைச்சகங்களுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கும் போது, பெரும்பாலான தொழில் அமைப்புகளும் இதற்கு ஆதரவாக மிகவும் தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிய நாடுகள்

சிறிய நாடுகள்

1 சதவீதத்திற்கும் குறைவாகவே பங்குகளைக் கொண்டிருக்கும் உள்நாட்டு தொழிலகங்கள், இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

49 சதவீதத்திற்குள் அந்நிய நேரடி முதலீட்டை வைத்திருப்பதால் எந்தவிதமான பயன்களும் இருக்கப் போவதில்லை என்கிறார்கள் இவர்கள். இது ஒரு பலனும் இல்லை என்ரு பல தரப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

51% FDI in defence will be a game changer for India

Raising foreign direct investment cap to at least 51 per cent in the defence sector will help India become a major manufacturing and export hub, reducing dependency on imported equipment. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X