அடுத்த 3 மாதங்களில் இந்தியா ஐடி துறையில் வேலைவாய்ப்பு குவியும்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வேலை தேடுபவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் ஒரு நல்ல செய்தி! அடுத்த மூன்று மாதங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இந்திய நிறுவனங்கள் முடுக்கி விடப்போகின்றன என்பதுதான் அந்த செய்தி.

 

குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் பலமான ஆட்சேர்ப்பு செயல்பாடுகள் இருக்கும், என்கிறது ஒரு அறிக்கை.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

MyHiringClub.com என்ற வேலை வாய்ப்பு இணையதளத்தைக் கொண்டு தி எம்ப்ளாய்மெண்ட் அவுட்லுக் நடத்திய ஆய்வில், இந்திய நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு வேகம் வரக்கூடிய காலாண்டில் மீண்டும் வேகம் பெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 5,413 நிறுவனங்களில் நடத்தப்பட்ட இணையவழி நேர்முகத் தேர்வுகளின் முடிவுகள் அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

காலி இடங்கள்

காலி இடங்கள்

தற்போதைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜுலை-செப்டம்பர்), வேலைக்கான ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் யூகங்களை தெரிவிக்கின்றன.

ஆய்வு

ஆய்வு

'இந்த ஆய்வில் 78 சதவீதத்தினர் பணியாட்கள் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், 4 சதவீதத்தினர் குறையும் என்றும், 14 சதவீதத்தினர் எந்தவித மாற்றமும் இருக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதில் நிகர வேலைவாய்ப்பு அளவு 42 சதவீதமாக உள்ளது,' என்று இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.

3 மாதம்
 

3 மாதம்

அடுத்த மூன்று மாதங்களில் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கடந்த ஆண்டை விட, மிகவும் உறுதியாக இருக்கிறது என்கிறார் MyHiringClub.com -இணைய தளத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் இராஜேஷ் குமார்

ஐடி மற்றும் வங்கி துறை

ஐடி மற்றும் வங்கி துறை

'பல்வேறு துறைகளிலும் வேலை தேடுபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தெரில்கள் & வங்கித் துறைகள் ஆகியவை 2014-வது நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆட்சேர்ப்பு திட்டங்களை முடுக்கி விடுவதில் முன்னணி வகிக்கும்,' என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

தென் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகள்

தென் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகள்

மண்டலங்களைப் பொறுத்த வரையில் ஆதிக வேலைவாய்ப்புகளை பெற்று 28 சதவீதத்துடன் தெற்கு மண்டலம், அதை தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்கள் இரண்டுமே 26 சதவீதத்துடனும் மற்றும் கிழக்கு மண்டலம் 20 சதவீதத்துடனும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to see robust hiring activities in next 3 months

Indian employers are likely to step up their hiring activities over the next three months, especially with IT & ITes segment expected to go on a robust recruitment drive, says a report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X