ஹைதராபாத்: பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் இந்தியாவிற்கு பிரதமர் சந்திப்பு, நிறுவன ஊழியர் சந்திப்பு, புதிய செயல் திட்டங்கள் அமைத்தல் என பல முக்கிய பணிகளுக்காக இந்தியா வந்துள்ளார்.
இன்று காலை அவர் பேசுகையில் இந்தியா உலகில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுள் ஒன்று மட்டுமல்ல மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர அனைத்து விதமான ஆற்றலும் இந்தியாவிற்கு உள்ளது என அவர் தெரிவித்தார்.
இவர் பேஸ்புக் நிறுவனத்தின் உயர் அதிகாரி மட்டும் அல்ல அமெரிக்காவின் கருவூல துறையின் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இவர் தலைமையில் பேஸ்புக் நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய உயரங்களை தொட்டது. மேலும் இவர் பேஸ்புக் நிறுவனத்தின் அசைக்க முடியாத சொத்து. 2 டிரில்லியன் டாலர் மதிப்புடைய இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என நான் நாம்புகிறோன். மேலும் இந்தியாவின் வளர்ச்சி அனைத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மட்டுமே சாந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வேலைவாய்ப்பு, இப்பிரச்சனை இந்தியாவில் மட்டும் இல்லை அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ளது இதனை சமாளிக்க ஒரே வழி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உக்கப்படுத்தி வளர்ப்பது தான். இத்தகைய நிறுவனங்கள் வளர்வதன் மூலம் வேலைவாய்ப்பு, வர்த்தகம், பண சுழற்ச்சி ஆகியவை கண்டிப்பாக உயரும். இந்தியாவின் ஜிடிபி-யில் 8 சதவீதம் சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களை மட்டுமே சார்ந்துள்ளது, 40 சதவீதம் உற்பத்தி துறையும், 40 சதவீதம் ஏற்றுமதியையும் சார்ந்துள்ளது. இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக 5 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததை தொடந்து சிறப்பான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார். இவரின் இந்திய பயணத்தில் மோடி உடனான சந்திப்பு மிகவும் முக்கியமானது. ஆசிய பசிபிக் கண்டத்தில் இந்திய பேஸ்புக்கின் இரண்டாவது மிகப்பெரிய சந்தை, மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சந்தை. இதனால் எங்களின் வருவாய் பட்டியலில் இந்தியா மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது என ஷெரில் சாண்ட்பெர்க் தெரிவித்தார்.
ஷெரில் சாண்ட்பெர்க்
இந்தியா
வேலைவாய்ப்புகள்
ஜிடிபி
வளர்ச்சி
நரேந்திர மோடி
பேஸ்புக்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications