டெல்லி: இந்திய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்த உலக வங்கியில் இருந்து இந்தியா 500 மில்லியன் டாலர் (ரூ.3,000 கோடி) கடன் உலக வங்கியிடம் கோரியுள்ளது. இதற்கான ஒப்புதலும் உலக வங்கி மத்திய அரசிற்கு அளித்துள்ளது.
மத்திய அரசும் உலக வங்கியும், இந்திய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்காக 500 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
திட்ட நடவடிக்கை
இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் குறைந்த வளர்ச்சி உடைய மாநிலங்களை நெடுஞ்சாலை இணைப்பு திட்டத்தின் மூலம் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியும் இணைக்கப்படுகிறது. இதனால் வருவாயில் குறைந்திருக்கும் இந்தியா மாநிலங்கள் உக்கம் பெரும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
3 மாநிலங்கள்
இந்த திட்டத்தில் இந்தியாவில் வருவாய் குறைவான மாநிலங்களாக கருதப்படும் பிகார், ஒரிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 1,120 தொலைவிற்கு ஒரு வழி சாலை அல்லது தேசிய நெடுஞ்சாலைக்கு இடைப்பட்ட சாலைகள் அமைக்கப்படும்.
கர்நாடக மற்றும் மேற்கு வங்காளம்
இத்திட்டத்தில் இரண்டும் இடைநிலை வருவாய் மாநிலமான கர்நாடக மற்றும் மேற்கு வங்காளமும் உள்ளது.
மொத்த மதிப்பு
இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் 1,146.05 மில்லியன் டாலர் ஆகும். இத்திட்டத்தை செயல்படுத்த சாலை போக்குவரத்து கழகம், மத்திய அரசு ஆகிய ஒரு தனி அமைப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடதக்கது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் சார்பாக இணை செயலாளர் நிலையா மித்தேஸ், உலக வங்கியின் சார்பாக மைக்கேல் ஹானே இந்த ஒப்பந்தத்திவ் கையெழுத்திட்டனர்.


Click it and Unblock the Notifications