சிங்கப்பூர்: ஆசிய பஸிபிக் மண்டலத்தின் "பொதுநலத் தொண்டாற்றும் ஹீரோக்கள்" என்ற பட்டியலை சமீபத்தில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. பல கோடீஸ்வரர்களும் தொழிலதிபர்களும் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியாவின் ரோகினி நிலேகனி மற்றும் அஜய் பிரமல் உட்பட நான்கு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தோனேஷியா, ஜப்பான், மலேஷியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 48 பேர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சமூக பெருந்தொண்டு
"நன்கு அறியப்பட்டிராத தொழிலதிபர்களும்" இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இருக்கும் 48 பேரும் தங்களுடைய "தயாள குணத்தினால்" சமூகத்திற்குப் பெருந்தொண்டு ஆற்றியுள்ளனர் என்று ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ரோகிணி நிலேகனி
55 வயதுடைய ரோகிணி நிலேகனி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நந்தன் நிலேகனியின் மனைவியாவார். குறிப்பிடத்தக்க பொதுநலவாதிகளுள் ஒருவரான ரோகிணி நிலேகனி, தன்னுடைய பல ஆண்டு கால பொதுநலச் சேவையின் மூலம் இதுவரை 40 மில்லியன் டாலருக்கும் மேலாக நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் நிலத்தடி நீர்
இந்தியாவில் சுகாதாரம் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வரும் ஆர்கயம் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர் அவர். தன்னுடைய இன்ஃபோசிஸ் பங்குகளை விற்றும் கூட அவர் நன்கொடைகள் அளித்திருக்கிறார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது.
1.7 மில்லியன் டாலர்
இவை தவிர, புதுடெல்லியில் இயங்கி வரும் இந்தியாவின் பழமையான ஆய்வு நிறுவனமான தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார கவுன்சிலுக்கு 1.7 மில்லியன் டாலர் நன்கொடை அளிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியில்
இவர் மட்டும் அல்லாமல் பிரமல் நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல், லூப்பின் நிறுவனத்தின் தலைவர் தேஷ் பந்து குப்தா மற்றும் கோல்டுமேன் சச்சஸ் வங்கியாளரான ஆஷிஷ் தவான் ஆகியோர் இப்பட்டியலில் புதிதாக இடபெற்றுள்ளவர்கள்.
இந்திய பணக்காரர்கள்
இந்தியாவில் இருக்கும் பெரும் புள்ளிகள் இது போல தொண்டுகள் அவ்வபோது செய்து வருகின்றன, அதில் பெரும்பாலானவை அவரிகளின் நிறுவனத்திற்கோ அல்லது அவர்களுக்கு சாதகமான வகையில் மட்டும் நன்கொடை செய்து வருகின்றனர். இந்நிலை மாறி இவர்கள் அளிக்கும் பெரு தொகை இந்தியாவின் ஏழை மக்களுக்கு நேரடியாக சேர வேண்டும். அவர்களின் வாழ்வியல் முன்னேற வேண்டும்.
இருவர்
இந்த வகையில் டாடா குழுமத்தின் ரத்தன் டாடா மற்றும் விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி ஆகியோர் பல வகையில் இந்தியாவின் ஏழ்மையை ஒழிக்கவு, கல்வி தரத்தை மேம்படுத்தவும் உதவினர், உதவிகின்றனர்.


Click it and Unblock the Notifications