சைபர் குற்றங்களில் மஹாராஷ்டிரா ஆந்திரா முன்னிலை!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: இந்தியாவில் சைபர் க்ரைம்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் மட்டும் ஐடி சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் அதற்கு முந்தைய ஆண்டில் பதிவான 2,761 வழக்குகளை விட 52 சதவீதம் அதிகரித்து 2013ஆம் வருடம் மொத்தம் 4,192 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இபிகோ சட்டத்தின் கீழ் பதிவான சைபர் குற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 5,5௦௦ ஐத் தாண்டுகிறது. நாடு முழுவதிலும் இந்த வழக்குகளுடன் தொடர்புடைய 3,301 குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா முன்னிலை

மஹாராஷ்டிரா முன்னிலை

மஹாராஷ்டிராவில் 681 பெரும் ஆந்திரப் பிரதேசத்தில் (பிரிக்கப்படும் முன்)தலா 635 பேரும் ஐடி சட்டத்தின் கீழ் கைதாகியதால் இம்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. முந்தைய ஆண்டில் மஹாராஷ்டிராவில் 471 மற்றும் ஆந்திராவில் 429 வழக்குகள் பதிவாகியுள்ளன.

50 சதவீதம் உயர்வு

50 சதவீதம் உயர்வு

மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலுமே முந்தைய ஆண்டை விட சைபர் குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளன.

112% குறைங்கள் உயர்வு

112% குறைங்கள் உயர்வு

நாட்டில் நடக்கும் அனைத்து விதமான குற்றங்களையும் பதிவு செய்து ஆவணப்படுத்தி வரும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பான தேசிய குற்றப் பதிவுகள் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின் படி, இபிகோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றங்கள் 2013 இல் முந்தைய ஆண்டை விட 122 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2013 இல் முந்தைய ஆண்டின் 595 இலிருந்து 1,316 ஆக அதிகரித்துள்ளது. போலீஸார் இபிகோ வின் கீழ் பதிவு செய்த 226 சைபர் க்ரைம் வழக்குகளுடன் மஹாராஷ்டிரா இதில் முதன்மை வகிக்கிறது.

குஜராத் தப்பித்தது

குஜராத் தப்பித்தது

ஐடி சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவாகியுள்ள மற்ற மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா (513), கேரளா (349), மத்தியப் பிரதேசம் (282) மற்றும் ராஜஸ்தான் (239) ஆகியவை இடம் பெற்றுள்ளன. குஜராத்தில் மட்டுமே முந்தைய ஆண்டில் பதிவான 68 சைபர் க்ரைம் வழக்குகள் குறைந்து 61 வழக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cyber crimes shoot up in India; Maharashtra, AP top the list

There has been a sharp increase in the incidence of cyber crimes in the country. The number of cases registered in 2013 under the IT Act has gone up by 52 per cent at 4,192 as against 2,761 in the previous year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X