மலிமான விலையில் அதிக விமானங்களை பறக்கவிடும் ஏர்ஏசியா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் மலிவு விலை விமான நிறுவனங்கள் பல உள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர இந்நிறுவனங்கள் புதிய புதிய திட்டங்களை தீட்டுகின்றன, இதில் புதிதாக வந்த ஏர்ஏசியா நிறுவனமும் ஒன்று. சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள வடகிழக்கு இந்தியாவில் நிறைய விமானங்களைப் பறக்கவிடப் போவதாக ஏர்ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

மலேசியாவின் ஏர்ஏசியா, டாடா சன்ஸ் குழுமம் மற்றும் அருண் பாட்டியாவின் டெலிஸ்ட்ரா ட்ரேட்ப்லேஸ் (49:30:21) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள ஏர்ஏசியா இந்தியா நிறுவனம், கடந்த ஜூன் 12ம் தேதி தன்னுடைய சேவையைத் தொடங்கியது.

கடும் போட்டி

கடும் போட்டி

இந்தியாவில் ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் ஜெட் ஏர்வேஸின் ஜெட்லைட் ஆகிய விமான நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாக ஏர்ஏசியா தன் கால்களை இந்தியாவில் பதித்துள்ளது.

சலுகைகள்

சலுகைகள்

போட்டி காரணமாக இந்த 4 விமான நிறுவனங்களும் ஏற்கனவே மிகவும் சீப்பான விலையில் இந்தியாவில் தங்களுடைய விமானச் சேவைகளை அளித்து வருகிறது.

ஏர் ஏசியா சலுகை

ஏர் ஏசியா சலுகை

இந்த நிலையில் அவற்றைவிட சுமார் 35 சதவீதம் வரை குறைவாகக் கட்டணம் வசூலிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஏர்ஏசியா இந்திய விமானக் களத்தில் குதித்துள்ளது.

போகாத இடத்திற்கு...

போகாத இடத்திற்கு...

இந்த நிலையில்தான் வடகிழக்கு இந்தியாவில் நிறைய விமானங்களைப் பறக்கவிடப் போவதாக ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது. "யாருமே போகாத இடங்களுக்கும் கூட நாங்கள் போவோம்" என்று ஏர்ஏசியா குழுமத்தின் சிஇஓ டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா தலங்கள்

சுற்றுலா தலங்கள்

வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலா தலங்கள் மிகவும் அதிகம். இங்கு எங்கள் விமானங்களைப் பறக்க விடுவது சுவாரஸ்யமாகவும், லாபகரமாகவும் இருக்கும் என்றும் டோனி கூறியுள்ளார்.

எப்படி இவ்ளோ சீப்பா?

எப்படி இவ்ளோ சீப்பா?

எங்கள் நோக்கமே இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சாதாரண மனிதனையும் பறக்க வைப்பதுதான். அதனால், சேவைக் கட்டணத்தை அவர்கள் தலையில் கட்ட விரும்பவில்லை. இதுதான் எங்கள் சலுகைகளுக்கான முக்கிய காரணம். இதுகுறித்து எங்கள் போட்டியாளர்கள் புகார் செய்யாமல் இருந்தால் சரி என்றும் டோனி கூறினார்.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா ஏர்ஏசியாவின் செயல்பாடுகள், புதிய சேவைகள், மற்றும் சலுகைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia to launch more flights

For AirAsia India, it is the North East that looks exciting next as a destination though the low cost carrier is open to flying to wherever it can across the country. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X