சென்னை: இந்தியாவின் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓவான விஷால் சிக்காவிற்கு இந்நிறுவனம் சம்பளத்தை வாரி வழங்கியுள்ளது. ஆனால் இது பன்னாட்டு நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்த தொகை மிகவும் குறைவு எனவும் கருத்து நிலவி வருகிறது.
விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்து சீஇஓவாக பணியாற்றுவதற்கு வருடத்திற்கு 30 கோடி சம்பளமும், 12 கோடி மதிப்புள்ள பங்குகளும் இன்போசிஸ் நிறுவனம் இவருக்கும் தருகிறது. இந்திய சந்தையில் உயரிய சம்பளமாக இருந்தாலும் உலக சாப்ட்வேர் துறையில் இது மிகவும் குறைவான ஒன்று.
ஆகஸ்ட் 1
இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சீஇஓவான ஷிபுலால் இந்நிறுவன பதவி மற்றும் பொறுப்புகளில் இருந்து ஜூலை 30ஆம் தேதி விலகுகிறார். அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 1ஆம் தேதி விஷால் சிக்கா நிறுவன பொறுப்பை ஏற்கிறார். விஷால் சிக்காவிற்கு தற்போது வயது 47.
மொத்த தொகை
சிக்காவிற்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் மற்றும் பங்கு மதிப்புடன் சேர்த்து மொத்தம் 42 கோடியே 48 இலட்சம். ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சீஇஓவிற்கு 108 கோடி சம்பளம், அதேபோல் ஐபிஎம் நிறுவனத்தின் சம்பளம் 96 கோடி சம்பளம் கிடைக்கிறது. இந்நிறுவனங்களும் கிட்டதட்ட ஒரே துறையில் தான் பணியாற்றுகின்றன, வருமானத்தில் சில மாற்றங்கள் இருந்தாலும் நிறுவன பொறுப்புகள் ஒன்றுதான்.
பிரச்சனைகள் தாண்டி வந்த இன்போசிஸ்
இன்போசிஸ் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக பல பிரச்சனைகள் சந்தித்து வந்து அதில் முக்கியமான சில, நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று உயர் அதிகாரிகளின் வெளியேற்றமம், உயர் அதிகாரிகள் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்தமாக நிறுவனத்தில் சேருபவரின் எண்ணிக்கையை விட வெளியேறுபவரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதேபோல் பல முக்கிய பிராஜக்ட்கள் இன்போஸ் நிறுவனத்தை விட்டு போனது இதனால் பெறுத்த நஷ்டத்தை சந்தித்தது. இன்னும் பல உள்ளது.
நாராயணமூர்த்தி
இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிய நாராயணமூர்த்தி தற்போது ஆன்லைன் சில்லைறை வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் மீது தனது சொந்த முதலீட்டு நிறுவனமான கட்டமரான் நிறுவனத்தின் மூலம் பல கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
முக்கிய கூட்டம்
இந்நிறுவனம் வருகிற ஜூலை 30ஆம் தேதி இந்நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் சிக்காவின் நியமனத்தை பொருட்டு ஒரு மிகப்பெரிய கூட்டத்தை கூட உள்ளது. இதில் இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களும் கூடுகின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications