வருமான வரி செலுத்தும் படிவத்தில் செய்யப்பட்டுள்ள 15 முக்கியமான மாற்றங்கள்!!

சென்னை: வருமான வரி செலுத்தும் படிவங்களில் இந்த வருடம் பல்வேறு புதிய தகவல்களை சேர்க்கும் நோக்கத்துடனும் மற்றும் விட்டுப் போன தகவல்களை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், வரி செலுத்துபவருக்குத் தேவையற்ற பகுதிகளை நீக்கவும் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டுக்கான வருமான வரி படிவத்தில் செய்யப்பட்டுள்ள முக்கியமான 15 மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வருமானத்திலிருந்து கழிக்கப்படும் வரிகள்  / மூலத்திலிருந்தே பெறப்படும் வரிகள்

வருமானத்திலிருந்து கழிக்கப்படும் வரிகள் / மூலத்திலிருந்தே பெறப்படும் வரிகள்

வரி செலுத்துபவர்களே TDS / TCSBSE வரி தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும். வரியை திரும்ப பெறும் குறிப்பிட்ட அட்டவணைகளில் 0.32% செலுத்த வேண்டும். முன்னதாக, அந்த ஆண்டுக்கான TDS / TCS-ஐ முன் கொண்டு வரும் வசதிகள் இல்லை. எனினும், புதிய படிவத்தில் முந்தைய ஆண்டில் கேட்காமல் விட்ட TDS/TCS விபரங்களை கொடுக்க வேண்டும் மற்றும் தற்போதைய ஆண்டில் கேட்கப்படாத TDS / TCS -ஐ அடுத்த ஆண்டுக்கும் கொண்டு செல்லும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நேரடியாக வரியை திரும்பக் கொடுத்தல்

நேரடியாக வரியை திரும்பக் கொடுத்தல்

முன்னதாக, வரி செலுத்துபவர்கள் செக் மற்றும் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தல் ஆகிய வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர். கார்ப்பரேட் வரி செலுத்துபவர்களுடன் இந்த விஷயத்தை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தும் நோக்கில், புதிய படிவத்தில் செக் மூலமாக கேட்கும் விருப்பத்தை நீக்கியுள்ளனர். அதன்படியாக, வரி செலுத்துபவர்கள் அனைவருக்கும், அவர்களுடைய வரியில் திரும்பக் கிடைக்கும் பணம் நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மூலதன சொத்துக்களின் வருமானத்தை கணக்கிடுதல்

மூலதன சொத்துக்களின் வருமானத்தை கணக்கிடுதல்

குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் மூலதன சொத்துக்களின் வருமானத்தை மாற்றுவதன் வழியாக கிடைக்கும் இலாபத்தைக் கணக்கிடும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய அட்டவணையை இந்த படிவங்கள் கொண்டுள்ளன. மேலும், குறிப்பிடப்பட்டுள்ள புதிய படிவத்தில், தலைப்புகளுக்கிடையிலான மூலதன இழப்பு மாற்றங்கள் பற்றிய தகவல்களையும் கொடுக்க வேண்டியுள்ளது.

மோசமான கடன்களுக்கு கூடுதல் கடனாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுதல்

மோசமான கடன்களுக்கு கூடுதல் கடனாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுதல்

0.1 மில்லியனுக்கும் அதிகமான அளவிற்கு மோசமான கடன்களை மொத்தமாக கொண்டிருக்கும், ஒவ்வொரு கார்ப்பரேட் அல்லாத வரி செலுத்துநரும் இப்பொழுரு தங்களுடைய PAN எண்ணை வரியை தாக்கல் செய்யும் போது வெளியிட வேண்டும். முன்னதாக, கார்ப்பரேட் வரி செலுத்துபவர்கள், நிறுவனங்கள், மனிதர்களின் அமைப்புகள், தனிநபர்களின் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் மட்டுமே இந்த வகையில் PAN எண் கேட்கப்பட்டு வந்தது.

தலைப்புகளுக்கு இடையிலான திருத்தங்கள்

தலைப்புகளுக்கு இடையிலான திருத்தங்கள்

ஓரிடத்திலிருந்து வரும் வருமானத்தை, அதே தலைப்பில் வரக்கூடிய மற்றொரு இடத்தின் நட்டத்தை வரி செலுத்துபவர் சரி செய்ய வேண்டும். இப்பொழுது வழங்கப்படும் புதிய படிவத்தில், இவ்வாறு தலைப்புகளுக்கிடையிலான நட்டத்தைப் பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும்.

அறிக்கையை கொடுக்க வெண்டிய நாள்

அறிக்கையை கொடுக்க வெண்டிய நாள்

கீழ்காண்பவற்றை கொடுக்கும் நாட்கள் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும்.
1. சர்வதேச அளவிலான அசோசியேட்டட் என்டர்பிரைசஸ்களில் பரிமாற்றங்கள் வைத்துள்ள வரி செலுத்துநர்களுக்கான - 3CEB படிவம் அல்லது
2. (புத்தக இலாபங்கள் அல்லது சரி செய்யப்படட மொத்த வருமானத்திற்காக வரி செலுத்துபவர்களுக்கான - 20B / 29C படிவம் ஆகியவற்றை இப்பொழுது கார்ப்பரேட் அல்லாத வரி செலுத்துபவர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர். இதன் மூலமாக, மேற்கண்ட படிவங்களை கொடுக்கும் நாட்களைப் பற்றி புதிய படிவத்தில் வரி செலுத்துபவர்கள் அனைவரும் குறிப்பிட வேண்டும்.

குறிப்பிடப்பட்ட வரைமுறைகளுக்குள்ளான பரிமாற்றங்களுக்கு :

குறிப்பிடப்பட்ட வரைமுறைகளுக்குள்ளான பரிமாற்றங்களுக்கு :

அண்மையில், சைப்ரஸை வரைமுறையில் குறிப்பிடப்படடுள்ள பகுதியாக மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் விளைவாக, சைப்ரஸ் உடனால் அனைத்து பரிமாற்றங்களைப் பற்றியும் புதிய படிவத்தில், வரி செலுத்துபவர்கள் அனைவரும் குறிப்பிட வேண்டும்.

 தனி அடையாள எண் (Unique Identification Number):

தனி அடையாள எண் (Unique Identification Number):

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் (Ministry of Corporate Affairs) ஒவ்வொரு கார்ப்பரேட் வரி செலுத்தும் நிறுவனம் மற்றும் வரைமுறைப்படுத்தப்பட்ட பொறுப்புகளையுடைய கூட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு தனி அடையாள எண் வழங்கப்பட்டிருக்கும். மேற்கூறப்பட்ட வரி செலுத்துநர்கள், இந்த தனி அடையாள எண்ணை புதிய படிவங்களில் எழுத வேண்டும்.

 பட்டியலிடப்படாத பங்குகளை இந்திய கார்ப்பரேட் வரி செலுத்துநர் மீண்டும் வாங்குதல்

பட்டியலிடப்படாத பங்குகளை இந்திய கார்ப்பரேட் வரி செலுத்துநர் மீண்டும் வாங்குதல்

பட்டியலிடப்படாத பங்குகளை இந்திய கார்ப்பரேட் வரி செலுத்துநர் மீண்டும் வாங்கும் போது, அதற்கும் வரி விதிப்பதற்கான வாய்ப்பை 2013-ம் ஆண்டின் நிதிச் சட்டம் வழங்கியுள்ளது. இதன் படி, புதிய படிவத்தில் ஒரு அட்டவணை இணைக்கப்பட்டுள்ளதால், இந்திய கார்ப்பரேட் வரி செலுத்துநர்(கள்) பட்டியலிடப்படாத பங்குகளை வாங்கியதற்கான விபரங்களை வெளியிடுவது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதற் கான வரியையும் அவர்கள் செலுத்த வேண்டும்.

குறிப்பிட்ட கார்ப்பரேட் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு புத்தக இலாபத்திலேயே வரி விதித்தல்

குறிப்பிட்ட கார்ப்பரேட் வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு புத்தக இலாபத்திலேயே வரி விதித்தல்

புத்தக இலாபம் என்றழைக்கப்படும் புக் ப்ராஃபிட் மீது, குறிப்பிட்ட சில கார்ப்பரேட் வரி செலுத்துநர் நிறுவனங்கள் (இன்சூரன்ஸ், மின்சாரம் மற்றும் வங்கித் துறை) வரியை செலுத்த 2012-ம் ஆண்டின் நிதிச் சட்டம் வகை செய்துள்ளது. கம்பெனிகள் சட்டம் 1956-ன் 6-வது அட்டவணைப்படி நிதி அறிக்கைகளை தயார் செய்யாத போதும் இந்த வரியை அவர்கள் செலுத்த வேண்டும் என்பது தான் இதன் சிறப்பம்சமாகும். இந்த விதிப்படி, புதிய வரி செலுத்தும் படிவத்தில் மேற்கண்ட வகையிலான கார்ப்பரேட் வரி செலுத்துநர்களுக்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே விலை நிர்ணயிக்கும் ஒப்பந்தம்

முன்கூட்டியே விலை நிர்ணயிக்கும் ஒப்பந்தம்

முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்யும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும், எந்த நாளில் இந்த ஒப்பந்தத்தில் நுழைகிறது என்பதை, புதிய வரி செலுத்தும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

கழிக்க இயலாத வியாபர செலவுகள்

கழிக்க இயலாத வியாபர செலவுகள்

புதிய வரி செலுத்தும் படிவத்தில், பின்வரும் கழிக்க இயலாத வியாபார செலவுகளைப் பற்றிய விபரங்களை குறிப்பிடுவதற்கான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. ஓய்வூதிய திட்டங்களுக்கான பங்களிப்பு
2. பாதுகாப்பு பரிமாற்றத்திற்கான வரியின் அளவு
3. மூலதனத்தின் மீதான செலவினம்
4. வியாபாரம் அல்லது தொழில் ஆகியவற்றை முழுமையாக சாராத செலவுகள்

 வியாபர வருமானத்தை மதிப்பிடுதல்

வியாபர வருமானத்தை மதிப்பிடுதல்

மூலதன சொத்துக்களாக அல்லாத நிலம் அல்லது கட்டிடங்களை மாற்றும் போது கிடைக்கும் வியாபார வருமானத்தை மதிப்பிடும் போது, முந்தையதை பரிமாற்றத்தின் உண்மை மதிப்பை விட குறைவான மதிப்பை அது கொண்டிருந்தால், முத்திரை தீர்வைக்கான உடனடி மதிப்பைப் பின்பற்ற வேண்டும். உண்மையான பரிமாற்றத்தின் மதிப்பு அதிகரிக்கும் வேளைகளில் இந்த உடனடி உதவி மதிப்பை வெளியிடும் வகையில் புதிய படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தடையற்ற வர்த்தக மண்டலங்கள் (FTZ) / சிறப்பு பொருளாதார மண்டலங்களிலுள்ள (SEZ) பிரிவுகள்

தடையற்ற வர்த்தக மண்டலங்கள் (FTZ) / சிறப்பு பொருளாதார மண்டலங்களிலுள்ள (SEZ) பிரிவுகள்

தடையற்ற வர்த்தக மண்டலங்கள் / சிறப்பு பொருளாதார மண்டலங்களிலுள்ள பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு கோருபவர்கள், தகுதியான யூனிட் உற்பத்தியை அல்லது குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதையும், அதற்கான வரிவிலக்கு தொகையையயும், அந்த ஆண்டிற்கான தகவலில் புதிய படிவத்தில் கொடுக்க வேண்டும்.

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான பட்டுவாடா

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான பட்டுவாடா

கார்ப்பரேட் அல்லாத வரி செலுத்துநர்கள் உட்பட, அனைத்து வரி செலுத்துநர்களுமே, வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு பட்டுவாடா செய்வது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும். இந்தவகையில், பின்வரும் பேமண்ட்களை குறிப்பிட முடியும்.
1. வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கான ஊதியம்
2. தரகுத் தொகை
3. இராயல்டி
4. தொழில் முறை கட்டணம்
5. தொழில்நுட்ப சேவைகளுக்கான கட்டணங்கள்
6. புதிய படிவத்தில் வட்டியை தனியாக வெளியிட்டிருக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+