வருமான வரி செலுத்துவோருக்கு அடிக்குமா ஜாக்பாட்??

டெல்லி: இந்திய மக்கள் அனைவரும் மிகுந்த ஆவளுடன் எதிர்பார்க்கும் மத்திய அரசின் புதிய பட்ஜெட் வரி செலுத்துவோருக்கும் என்ன செய்யப்போகிறது. ஏற்கனவே இந்தியாவில் வருமான வரி அதிகளவில் வசூலிப்பதாக கருத்து உள்ளது, இவர்களுக்கு மத்திய அரசு கசப்பான மருந்தை அளிக்கபோகிறதா இல்லை இனிப்பான மருந்தை அளிக்கபோகிறதா என்பது கேள்விக்குறியே

இதை பற்றி இ.ஒய் நிறுவனத்தின் வரி மற்றும் ஒழுங்குமுறை சேவை பரிவின் தலைவர் அலோக் அகர்வால் சில முக்கியமான கருத்துகளை தெரிவக்கிறார். அதை பற்றி இங்கு முழுமையாக இங்கு பார்போம்.

மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்

மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும்

தனிநபர் வரி வகிதத்தில் மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். அதிலும் தற்போது 2 இலட்ச வருமானத்திற்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் , அதனை 3 இலட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் 3 இலட்சத்திற்கு குறைவாக வருமான பெறுபவர்கள் அதிகப்படியான பலன்களை அடைவர்.

வரிக் குறைப்பு

வரிக் குறைப்பு

அதுமட்டும் அல்லாமல் வருமானத்தில் சுகாதார காப்பீடு, ஆயுள் காப்பீடு மற்றும் ஒய்வுதிய திட்டங்களுக்கான வரி குறைப்பு சட்டங்களான 80சி, 80டி ஆகியவற்றிலும் சில மாறுதல்கள் இருக்கும் என அலோக் தெரவித்தார்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

மத்திய அரசின் மிக முக்கிய துறையாக கருதுவதில் ரியல் எஸ்டேட் அல்லது வீட்டுவசதி துறையும் ஒன்று. ஆனால் கடந்த சில வருடங்களாக அதிக வரி மற்றும் விலை உயர்வால் தனிநபர்களின் உள்ளீடு இத்துறையில் மிகவும் குறைந்துள்ளது. இதற்கு முக்கியமாந காரணம் வீட்டுக்கடனுக்கான வட்டி வகிதத்தில் தொடர் உயர்வு.

விடிவுகாலம் பொறந்தாச்சு!!

விடிவுகாலம் பொறந்தாச்சு!!

இப்பிரச்சனையை களையும் வகையில் 5 இலட்சம் வங்கி கடன்களுக்கு மிகவும் குறைவான வரியை மட்டுமே வசூலிக்க மத்திய முடிவு செய்துள்ளது. இதனால் வங்கி மட்டும் அல்லாமல் கட்டுமான துறை, இந்தியாவின் உள்கட்டமைப்பு என பல துறைகள் அதன் மூலம் வளர்ச்சி பெறும் என்பது நிதர்சனமான உண்மை. அதனினும் முக்கியமாக சாதாரண மக்களின் சொந்த வீடு என்ற கனவு பளிக்கும்.

மாத சம்பளம் பெறும் தனிநபர்

மாத சம்பளம் பெறும் தனிநபர்

பொதுவாக இந்தியாவில் மாத சம்பளம் நிறுவனங்களில் சில சலுகைகள் வழங்கப்படும், அதில் போக்குவரத்து சலுகை, குழந்தை கல்விக்கான சலுகைகளை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஒய்வுதிய முதலீடு

ஒய்வுதிய முதலீடு

பணி ஒய்விற்கு பிறகு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மக்களுக்கு ஒய்வுதியம் கிடைப்பதில்லை அதனால் இந்தியாவில் தற்போது ஒய்வுதிய முதலீட்டு திட்டத்திற்கான முதலீட்டுத் துறை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதனை உக்கப்படுத்தும் விதமாக இத்தகைய திட்டங்களில் 1 இலட்சம் வரை செய்யப்படும் முதலீடுக்கு வரி விலக்கும், தேசிய ஒய்வுதிய திட்டத்தில் செய்யப்படும் 1 வரையிலான முதலீடுக்கு வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+