1.23 லட்சம் கோடி அன்னிய முதலீட்டுடன் புதிய பட்ஜெட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசின் மீது நம்பிக்கை வைத்த பன்னாட்டு மூதலீட்டாளர்கள் கடந்த 6 மாத காலத்தில் இந்திய சந்தையில் சுமார் 20.4 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர். இது இந்திய சந்தையில் குறைந்த காலத்தில் அதிகளவு முதலீடு செய்ய தொகை என்பது குறிப்பிடதக்கது.

 

மேலும் அடுத்த வரும் பட்ஜெட் தாக்கல் பிறகு இந்திய சந்தையில் துறை சார்ந்த முதலீடு மேலும் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதில், கட்டுமானத்துறை, கல்வி, ஆராய்ச்சி, பாதுகாப்பு துறை, உற்பத்தி மற்றும் தயாரிப்பு துறைகளில் அதிகளவில் முதலீட்டை எதிர்பார்க்களாம் எனவும் சந்தை கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்திய பங்கு சந்தையில் 9.96 பில்லியன் டாலரும் (ரூ.59,795 கோடி), கடன் சந்தையில் 10.4 பில்லியன் டாலாரும் (ரூ.62,834 கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 20.4 பில்லியன் டாலர் (ரூ.1.23 இலட்சம்கோடி) இந்திய சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த திடீர் முதலீடு??

ஏன் இந்த திடீர் முதலீடு??

பொதுவாக மோடியின் மீது பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவில் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர், அதற்கு முக்கிய காரணம் குஜராத் மாநிலத்தில் அவர் செய்த சிறப்பு மிக்க பணிகள் தான். மேலும் இவர் பிரதமார் போட்டியாளராக அறிவித்த நாள் முதல் இந்திய சந்தையில் முதலீடு தாறுமாறாக இருந்தது.

வளர்ச்சி திட்டங்கள்
 

வளர்ச்சி திட்டங்கள்

மேலும் மோடியின் செயல் திட்டங்கள் அனைத்து நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக இருக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தை இந்திய சந்தையில் கொட்டுவதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும். இத்தகைய முதலீட்டால் முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

இந்திய பங்கு சந்தை கடந்த 6 மாதத்தில் சுமார் 20 சதவீதம் உயர்ந்ததிற்கு முக்கிய காரணம் அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் அதிகப்படியான முதலீடு தான்

பட்ஜெட்

பட்ஜெட்

வருகிற ஜூலை 10 தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது, அதற்கான முதல் அமர்வு கூட்டம் இன்று துவங்கியது. எப்போதும் போல் இன்று கூட்டத்தில் கூச்சலும் சத்தமுமாக முடிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FII inflows hit $20 billion in six months, all eyes on Budget

Overseas investors have pumped in a staggering $20.4 billion into the Indian market in the first half of the year, mainly on hopes of a stable and reform-oriented government at the Centre.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X