பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தும் மத்திய அரசு!! பட்ஜெட் 2014

டெல்லி: மாதம் மாதம் சம்பளம் வருவது போல் மாதந்தோறும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடரந்து அதிகரித்து வருகிறது, இந்த மிகப்பெரிய பிரச்சனையை களையும் விதமாக மத்திய அரசு, டிசலுக்கான கலால் வரியை அகற்ற நிதியமைச்சகத்திற்கு மத்திய அரசு பரிந்துறை செய்துள்ளது. ஆனால் இதனை நிதியமைச்சர் தான் தனது பட்ஜெட் திட்டத்திற்கு இது பொருந்துமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இந்த கலால் வரியால் டீசலின் விலை லீட்டருக்கு 3.56 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த வரியை குறைப்பதின் மூலம் மக்களுக்கு மிகுந்த நன்மையை அளிக்கும், மேலும் இந்த விலை குறைப்பால் விலைவாசி குறிப்பிடதக்க அளவு குறையும், குறிப்பாக உணவு பொருட்களின் விலை நிச்சயம் குறையும். அது சரி அப்ப பெட்ரோலின் நிலை என்ன??

பெட்ரோல்

பெட்ரோல்

ஏற்கனவே பெட்ரோல் இந்தியாவில் சந்தை விலைக்கு நேரடியாக விற்கப்படுகிறது. இதனால் விலையை குறைத்தால் நிதியமைச்சகம் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே பெட்ரோல் சர்வ தேச சந்தையில் குறைந்தால் தான் இந்தியாவிலும் குறையும்.

விலை உயர்வின் காரணங்கள்

விலை உயர்வின் காரணங்கள்

பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் படி டீசல் டெல்லி விநியோக முனையத்தில் வரி எதும் இல்லாமல் அதன் விலை 46.41 ரூபாய் என்ற அளவில் விநியோகம் செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையாளர் இடத்தில் அதன் விலை ஏற்றம் துவங்குகிறது. கலால் வரியாக 3.56 ரூபாய், டீலர் கமிஷனாக 1.19 ரூபாய், வாட் வரியாக 12.50 சதவீதம், காற்று களையை கட்டணமாக லீட்டருக்கு 0.25 பைசா வரை உயர்கிறது. ஆக மொத்தம் மக்களுக்கு 57.84 ரூபாயாக கிடைக்கிறது.

கடினமான நிலை

கடினமான நிலை

இந்த விலை குறைப்பு நிதியமைச்சகத்திற்கு தற்போதிய நிலையில் மிகுந்த நெருக்கடியை அளிக்க கூடியதாக இருக்கிறது. இந்த கலால் வரியை குறைத்தால் வருமானத்தில் மிகப்பெரிய மதிப்பு மிகவும் குறைந்த காலத்திலேயே மத்திய அரசு அடையும்.

டீசல்

டீசல்

பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் தகவல் படி இந்தியாவின் மொத்த எண்ணெய் விற்பனையில் டீசலின் பங்கு 40 சதவீதம். மேலும் ஒவ்வொரு வருடத்திற்கு அதன் உபயோகம் 1.3 சதவீதம் அதிகரித்து வருகிறது. கலால் வரியால் பெட்ரோலின் விலை லீட்டருக்கு 9.48 ரூபாய் அதிகரிக்கிறது.

மாநில அரசின் உள்ளீடு

மாநில அரசின் உள்ளீடு

சுங்கம் மற்றும் கலால் வரி என்ற இரு பேய்கள் போதாது என்று மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மதிப்பில் கூடுதலாக விற்பனை வரியையும் சேர்க்கிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போது மாநில அரசுகள் விற்பனை வரியின் மூலம் அதிகளவில் வருமானத்தை பொருக்குகிறது.

விவாதம்

விவாதம்

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பெட்ரோலிய பொருட்களை சரக்கு மற்றும் சேவை (GST) வரியில் இணைக்க விவாதம் துவங்கியது. ஆனால் மாநில அரசுகள் வருமான பெருக்கவதற்காக அதனை தனியே விட்டுவிட அறைகூவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+