டெல்லி: செவ்வாய்கிழமை 12.08 மணியளவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் 2014ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அறிவித்தார். இதில் அவர் மக்களுக்கு பயன்படும் வகையில் பல திட்டங்களை அறிவித்தார்.
அவரின் அனைத்து திட்டங்களும் இந்திய ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவே இருந்தது. மேலும் ரயில்வே துறை இயக்கத்தை உலக தரத்திற்கு உயர்த்தவும், செயல்படுத்தவும் வகையில் தொழிற்நுட்ப சார்ந்த திட்டங்களை அறிவித்தார்.
அதில் அவர் இந்திய ரயில்வே துறை முற்றிலுமாக மாற்றியமைக்க சுமார் 9 இலட்சம் கோடி வேண்டும் என தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டை பற்றி முழுமையாக இங்கு பார்போம்.
கிடப்பில் பல திட்டங்கள்
சுமார் 4 மிகப்பெரிய திட்டங்கள் கடந்த 30 ஆண்டு காலமாக கிடப்பில் உள்ளது. அதை நிறைவேற்றினாலே இந்திய ரயில்வே துறையில் லாப விகிதங்கள் மிகப்பெரிய அளவில் மாறும். இதில் முக்கியமான ஒன்று புல்லட் ரயில்.
பணப்புழக்கம்
கடந்த 10 வருட காங்கிரஸ் ஆட்சியில் இந்திய ரயில்வே துறைக்கு வெறும் 40,000 கோடி ரூபாய் மட்டுமே உட்செலுத்தியுள்ளது. ஒரு புல்லட் ரயிலின் விலை மட்டுமே 60,000 கோடி, இந்நிலையில் ரயில்வே துறை எப்படி அதிகளவில் வருமானத்தை பெருக்க முடியும் என கேள்வி ஏழுப்பினார்.
வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்
இத்துறையின் வளர்ச்சிக்கு தற்போதிய முக்கிய தேவை பணம் மட்டுமே. நிதியமைச்சகத்தை மட்டுமே சார்ந்து செயல்பட்டால் உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்பு சீர்குழந்து போகும் அபாயம் ஏற்படும்.
நிதியை பெருக்கும் வழிகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் தனியார் நிறுவன முதலீடு, பொது துறை நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் நிதி உட்செலுத்துதல், அரசின் நிதி ரயில் செயலாக்கத்திற்கு மட்டும் பயன்படுத்துதல் போன்றவற்றை அவர் வலியுறுத்தினார்.
வளர்ச்சிக்கு அது போதாது
தற்போது இருக்கும் முதலீட்டு திட்டங்கள் இத்துறையின் வளர்ச்சிக்கும் ஒருபோதும் பொருந்தாது. எனவே அதிகப்படியான முதலீட்ட பெறு அனைத்து விதமான திட்டங்களும் செயல்படுத்த வேண்டும் என அவர் அறிவித்தார்.
திட்டங்கள் செயல்படுத்தும் முறை
திட்டங்களை நிறைவேற்ற காலவறை நிர்ணயம் செய்தல், நிறுவனங்களுடனான கூட்டு முயற்சி, அதிகப்படியான உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் இறக்குமதி போன்றவற்றை செயல்படுத்தி ரயில்வே துறையை உலக தரத்திற்கு உயர்த்த முயற்சி செய்ய உள்ளோம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications