டெல்லி: இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சி கடந்த ஜூன் மாதத்தில் சீனாவை விட அதிகமான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வளர்த்து வரும் வலிமையான பொருளாதாரத்தின் காரணமாக இந்தியவின் வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. மேலும் இந்த வளர்ச்சி கிட்டதட்ட ஒரு வருடத்தின் உச்சம் என்று சொல்லலாம், 2013ஆம் ஆண்டு மார்ச் மாத்திற்கு பிறகு சிறப்பான வளர்ச்சி பதிவு செய்தது இந்த ஜூன் மாதம் தான்.
எச்.எஸ்.பி.சி யின் எமர்ஜிங் மார்கெட் இன்டக்ஸின் (EMI) படி இந்திய உற்பத்தி மற்றும் சேவை துறையின் வளர்ச்சி ஜூன் மாதம் 52.3 சதவீதம் எட்டியுள்ளது. இதற்கு முன் மே மாதம் 50.6 மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இந்த வளர்ச்சி 15 மாத உயர்வு என்றும் எச்.எஸ்.பி.சி தெரிவித்துள்ளது.
உலக சந்தைகள்
உலக சந்தைகள் அனைத்தும் கடந்த ஜூன் மாதம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில் பெரும் பகுதி இந்தியாவும், சீனாவும் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.
உற்பத்தி
இந்நிலையில் இந்தியாவை போல் சீனாவும் 15 மாத சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், ரஷ்யா உள்நாட்டு மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நடக்கும் பிரச்சனைகளின் காரணமாக இந்நாட்டின் உற்பத்தி ஒரே நிலையாக உள்ளது. அதில் பிரேசில் சரிவை தழுவியுள்ளது.
உற்பத்தி மற்றும் சேவை துறை
எச்.எஸ்.பி.சி உலக நாடுகளின் உற்பத்தி மற்றும் சேவை துறையின் வளர்ச்சி குறியீட்டின் கணிப்பில் இந்தியாவிற்கு 53.8, சீனா 52.4, பிரேசில் 49.9, ரஷ்யா 50.1 என்ற மதிப்பை பெற்றுள்ளது. இந்த குறியீட்டில் 50 புள்ளிகளுக்கும் அதிகமாக பெற்றிருக்கும் நாடுகள் உற்பத்தி மற்றும் சேவை துறையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
மொத்த வளர்ச்சி
வளரும் நாடுகளின் இத்தகைய வளர்ச்சி உலக பொருளாதார நிலையை மாற்றியமைக்கும். மேலும் அமெரிக்கா, பிரட்டன போன்ற நாடுகளின் வளர்ச்சியை விட இந்தியா, பிரேசில், சீனா, நாடுகளின் வளர்ச்சி விகிதம் உலக பொருதாரத்தை அதிகளவில் பாதிக்கும்.
பணவீக்கம்
நாட்டில் வளர்ச்சி அதிகரித்தாலும் பணவீக்கத்தின் அளவு கடந்த 4 மாத காலமாக தொடந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதனால் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
அடுத்த 12 மாதம்
மத்திய அரசின் அதிரடியான திட்டங்கள் மூலம் இந்தியவிற்கு 12 மாத காலகட்டத்தில் அபரிதமான வளர்ச்சியை பெற்றும் என்பது உறுதி. இந்த வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது அன்னிய முதலீடு என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் கடந்த 3 மாதமாக இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவைத்துறையின் வளர்ச்சி தொடந்து அதிகரித்த வண்ணமே உள்ளது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications