சென்னை: கடந்த சில தினங்களாக ஏறுமுகத்திலேயே இருந்த பங்கு சந்தை, வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 7ம் தேதி மும்பை பங்கு சந்தை 26,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. நேற்று அது 26,190.44 புள்ளிகளைத் தொட்டிருந்தது.
மோடி அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் துவங்கியதிலிருந்தே பங்கு சந்தை சூப்பர் ஸ்டார் போல புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை மீட்டுக் கொண்டு வருவதற்காக பல துறைகளிலும் புதிய முயற்சிகளைக் கொண்டுவர முயற்சிக்கும் வேளையிலும், நிஃப்டி சந்தையும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
பங்கு சந்தை வளர்ச்சி அடைந்ததற்கான 6 முக்கியக் காரணங்கள் இதோ...
பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பருவமழை தாமதம் ஆகிய மோசமான சூழ்நிலைகள் இருக்கும் போதிலும், நாளை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் பங்கு சந்தைப் முதலீட்டாளர்கள் அதிகளவில் வர்த்தகம் செய்யவதால் புள்ளிகள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
மேக்ரோ இண்டிகேட்டர்கள்
கடந்த சில மாதங்களில் சில்லறை வணிகம் குறைந்து, மொத்தவிலை அதிகரிப்பால் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அளவு வீழ்ச்சியடைந்தது.
பற்றாக்குறை குறைவு
ஓராண்டுக்கு முன் நன்றாகக் குறைந்திருந்த பற்றாக்குறை, தற்போது 13% வரை வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில் அதித டாலர் உள்ளீட்டால் வர்த்தகம் நிலைபெற்றுள்ளது.
அன்னிய வரவுகள்
இந்த ஆண்டு இந்தியத் தொழில் கூட்டமைப்பு மூலம் இதுவரை 10 பில்லியன் டாலர்கள் அந்நிய முதலீடுகள் கிடைத்துள்ளன.
கார்ப்பரேட் முடிவுகள்
இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் வட்டி விகிதங்கள் நிலையாக இருக்கும் நிலையில், இந்தியாவின் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய ஏப்ரல்-ஜூன் காலாண்டுக் கணக்கு முடிவுகளில் அபரிமிதமான அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
கடந்த மாதம் இராக் சண்டைகளால் அதிகரித்த கச்சா எண்ணெய்ப் பொருள்களின் விலை, தற்போது $111க்கும் கீழ் சரிந்துள்ளது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

3 மாதத்தில் 75% சரிவு! ரத்தம் சிந்தும் பென்னி ஸ்டாக்ஸ் - இதில் உங்க பங்குகள் இருக்கா? உஷார்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications