நாளைய மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்??

டெல்லி: நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பத்திற்கும் மத்தியில் ஒரு வழியாக சதானந்த கவுடா தனது ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்துள்ளார். அடுத்து என்ன என்று பார்க்கும் போது, மத்திய பட்ஜெட் தான். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இணைந்து மிகவும் சிறப்பான முறையில் பட்ஜெட்டை தயார் செய்துள்ளதாக நிதியமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சரி புதிய அரசின் மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்று யாருக்கேனும் யூகம் உண்டா? ரயில்வே பட்ஜெட்டை வைத்து பார்க்கும் போது சில பல யூகங்களை நம்மால் மிகவும் சுலபமாக கணிக்க முடியும்.. இது என்ன என்பதை கிழே உள்ள ஸ்லைடரில் ஜாலியாக பார்க்கலாம்.. மக்களின் பார்வையில்..

ரயில்வே பட்ஜெட்

ரயில்வே பட்ஜெட்

புதிய அரசின் மத்திய பட்ஜெட்டுக்கு ஒரு முன்னோட்டமாக தான் இந்த ரயில்வே பட்ஜெட் பார்க்கப்படுகிறது. தற்போது ரயில்வே துறைக்கும் சரி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சரி நீண்ட கால கண்னோட்டத்தில் பார்க்கும் நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் அதிகம் தேவைப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே பட்ஜெட்டும் இதனை பொருத்தே அமைந்து.

மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்

அருண் ஜேட்லி வகுத்த இந்தி புதிய பட்ஜெட் பொருந்த வரையில், வருமான தேடித்தரும் திட்டங்கள், நிதி திரட்டப்படும் திட்டங்களும் அதிகளவில் பார்க்க முடியும், குறிப்பாக அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் வகையில் இருக்கும். வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்றால் அதற்கான செலவுகளுக்கும் அதிகப்பியான நிதி தேவைப்படும். மேலும் இந்தியாவில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இத்தகைய பெரும் திட்டகங்களை தீட்டினால் இந்தியா வளமை பெற இன்னும் 20 வருடங்கள் ஆகும் (சரியாக சொன்னால் அப்துல் கலாம் கண்ட கனவு 2050வது வருடத்தில் கூட பழிக்காது).

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

மத்திய பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது முக்கிய துறைகளில் அன்னிய முதலீட்டை உக்கப்படுத்துதல், கட்டுமான திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குதல், மத்திய அரசு வைத்திருக்கும் பொது துறை நிறுவனங்களில் பங்குகளை குறைத்தல் (அதன் மூலம் அதிகப்பிடியான நிதி திரட்ட முடியும்), அதிகப்படியாக அளிக்கப்பட்டு வரும் மாணியங்களை குறைத்தல் ஆகிய முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.

வருமான வரி

வருமான வரி

இந்த பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பில் நடுத்தர மக்களுக்கு சாதகமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. தற்போது இருக்கும் 1இலட்சம் வரையிலான வருமானத்திற்கு வட்டி முழுமையைக வரி தள்ளுபடி அளவை 2இலட்சம் வரை உயர்த்தபடலாம், அதேபோல் மாத சம்பளம் பெறுவோறுக்கு வரியில்லா கொடுப்பணவு (allowance) அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 80சி சட்டத்தின் கீழ் 5 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு வரியில் சில தள்ளுபடி காத்துக்கொண்டு இருக்கிறது.

 

 

வரி வசூல்

வரி வசூல்

கடந்த வருடம் இந்தியாவில் 5.01 இலட்சம் கோடி வரி நிலுவையில் உள்ளது. இத்தொகையை சரியான வகையில் வசூல் செய்திருந்தால் புதிய பட்ஜெட்டி இன்னும் சிறப்பாக இருக்கும். வசூலிக்கப்படாத வரியை வசூலிக்க ஒரு புதிய அமைப்பை உருவாக்கவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி முடிவு செய்துள்ளார்.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் தற்போது தலைவிரித்து ஆடும் பிரச்சனை என்றால் அது பணவீக்கமாக தான் இருக்கும், இந்தியாவில் தற்போது பணவீக்கம் 6 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. இதனை களைய பல சிறப்பு திட்டங்கள் தேவை, இதில் என்ன செய்ய போகிறார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொழிலாளர் சட்டம்

தொழிலாளர் சட்டம்

மேலும் இந்த பட்ஜெட்டில் தொழிலாளர் சட்டத்தில் தொழிலாளர்களுக்கு சாதகமான சில திருத்தகங்கள் செய்யப்பட உள்ளது. இதற்கு முன் இருந்த அரசு நிறுவனங்களுக்கு சாதகமான இதில் எந்த விதமான மாற்றங்களும் செய்யவில்லை. இந்த அரசு தொழிலாளர்களின் வேலை நேரம், நிறுவணங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு, நெருப்பு மற்றும் அபயகரமான தொழிற்சாலைகளில் பாதுகப்பு அதிகரித்தல் ஆகியவற்றை முன்நிறுத்த உள்ளதாக தெரிகிறது.

6 மாதத்தில் அன்னிய முதலீடு

6 மாதத்தில் அன்னிய முதலீடு

மோடி அவர்களின் தேர்தல் வாக்குறுதியை கருத்தில் கொண்டு, அவரது வெற்றியை தொடர்ந்து கடந்த 6 மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 20 பில்லியன் டாலர்கள் இந்திய சந்தையில் குவித்துள்ளனர்.

உறுதியான அறிவிப்புகள்

உறுதியான அறிவிப்புகள்

மேலும் நிதியமைச்சர் உறுதியாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று தான் ரயில்வே கட்டணங்களை உயர்த்துதல். பல எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளை எதிர்த்து ரயில்வே கட்டணத்தை 14% உயர்த்தியுள்ளார். அதனை இத்துறை அமைச்சரான கவடா நேற்றைய பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சியில் வெகுவாக பாராட்டினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+