டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59.73 ஆக உயர்வு!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கிய சில நொடிகளில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயரந்து 59.73 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.75 ரூபாயாக இருந்தது, பின்பு இந்திய ரூபாய் 59.63 வரை உயர்ந்தது குறிப்பிடதக்கது.

மேலும் மத்திய பட்ஜெட்டில் அன்னிய முதலீட்டுக்கு அதிக வாய்ப்பு அருண் ஜேட்லி அளித்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு மோலும் உயர அதிகப்படியான வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதம் வரை உயர்ந்தியதை தொடர்ந்து ஆயுத இறக்குமதிக்காக பல இலட்ச கோடிகள் செலவிடுவது குறையும்.


Click it and Unblock the Notifications