வால்-மார்ட் இந்தியாவின் புதிய ஆன்லைன் ஸ்டோர்!! விற்பனை கல்லாக் கட்டுது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதெராபாத்: வால்-மார்ட் ஸ்டோர்ஸ் இன்க். நிறுவனத்தின் ஏகபோக கிளை நிறுவனமான வால்-மார்ட் இந்தியா நிறுவனம், கடந்த வாரம் அதன் ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம் சேவையை, ஹைதராபாத் மற்றும் லக்னோவில் உள்ள பெஸ்ட் ப்ரைஸ் மாடர்ன் ஹோல்ஸேல் ஸ்டோர்ஸைச் சேர்ந்த உறுப்பினர்களின் உபயோகத்துக்கென தொடங்கியுள்ளது.

 

செயலளவில் நிஜமான அங்காடி போல் செயல்பட்டு வரும் இந்த இ-காமர்ஸ் ப்ளாட்ஃபார்ம், அதில் உள்ளது போன்றே பலவிதமான விற்பனை பொருட்கள் மற்றும் சில பிரத்யேகமான பொருட்களை அதன் உறுப்பினர்களுக்கென ஆன்லைனில் கடை விரிக்கிறது.

அண்ணாசிக் கடை மாதிரி இருக்கும்

அண்ணாசிக் கடை மாதிரி இருக்கும்

"நிஜமான அங்காடி போல் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் அங்காடியின் மூலம் எமது உறுப்பினர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கம்....எங்கள் உறுப்பினர்களுக்கு எங்கள் சேவைகளை சிறப்பாக வழங்குவதற்கான மற்றொரு அலைவரிசையாக இச்சேவை பரிமளிப்பதோடு, ஆன்லைனிலேயே ஆர்டர் செய்யும் வசதி, 24 மணி நேரத்திற்குள் வீட்டில் விநியோகம், கட்டணம் செலுத்துவதற்கான பல்வேறு வகை சுலபமான முறைகள் போன்ற இதன் மேலதிக வசதிகள் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவுகின்றது," என்று வால்-மார்ட் இந்தியாவின் பிரசிடென்ட் மற்றும் சிஇஓவாகிய க்ரிஷ் ஐயர் கூறியுள்ளார்.

முன்கூட்டிய ஏற்பாடுகள்

முன்கூட்டிய ஏற்பாடுகள்

இதன் அறிமுகப்படலத்துக்கு முன்பாக, உறுப்பினர்களிடையே இம்முயற்சியைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வெப்சைட்டின் முறையான உபயோகம், அதன் நற்பயன்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் பிராசஸ்கள் பற்றி அவர்கள் நன்றாக புரிந்து கொள்ளும் நோக்கிலும், உறுப்பினர்களைக் கொண்ட பயிலரங்குகள் இவ்விரு நகரங்களிலும் (ஹைதராபாத் மற்றும் லக்னோ) வால்-மார்ட் இந்தியா குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

பெஸ்ட் ப்ரைஸ் மாடர்ன் ஹோல்ஸேல் ஸ்டோர்ஸ்
 

பெஸ்ட் ப்ரைஸ் மாடர்ன் ஹோல்ஸேல் ஸ்டோர்ஸ்

வால்-மார்ட் இந்தியாவின் கேஷ் & கேரி வர்த்தகம், பி2பி ஃபார்மாட்டில் இருப்பதினால், முறையாக பதிவு செய்த, இவ்விரு நகரங்களைச் சேர்ந்த பெஸ்ட் ப்ரைஸ் மாடர்ன் ஹோல்ஸேல் ஸ்டோர்ஸின் உறுப்பினர்களுக்கு மட்டுமே ஆன்லைனில் ட்ரான்ஸாக்ட் செய்யும் தகுதி வழங்கப்படும் என்று இந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

வால்-மார்ட் இந்தியா

வால்-மார்ட் இந்தியா

வால்-மார்ட் இந்தியா நிறுவனம் இந்தியா முழுவதிலுமாக, சுமார் 9 மாநிலங்களில் 20 பெஸ்ட் ப்ரைஸ் மாடர்ன் ஹோல்ஸேல் அங்காடிகளை சொந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் முதல் அங்காடி 2009 ஆம் வருடம் மே மாதத்தின் போது அமிர்தசரஸில் தொடங்கப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wal-Mart India launches B2B e-commerce platform

Wal-Mart India, the wholly owned subsidiary of Wal-Mart Stores Inc., on Tuesday launched its online platform for members of Best Price Modern Wholesale stores in Hyderabad and Lucknow.
Story first published: Thursday, July 10, 2014, 18:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X