மத்திய பட்ஜெட்ல அப்படி என்ன தாங்க இருக்கு??

சென்னை: பட்ஜெட்டை பற்றி பல செய்திகள் படித்து களைத்து இருக்கும் இந்த வேலையில், பரீட்சைக்கும் போகும் முன் ரிவைஸ் செய்வது போல மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை, துறை வாரியாக சிம்பிளாக ஒரு ரவுன்டு பார்க்கலாம் வாங்க.

இது சீப்.. இது ரொம்ப காஸ்ட்லி...

இது சீப்.. இது ரொம்ப காஸ்ட்லி...

இந்த பட்ஜெட்டை பொருத்தவரை மொபைல் போன், கம்பியூட்டர், சோப்பு மற்றும் ஆயில், சின்ன எல்.சி.டி டிவிகள், வைரம் மற்றும் ரத்திரனங்கள், காலணிகள் எல்லாம் குறைவான விலையில் வாங்க முடியும். சிகரெட், ரேடியோ டாக்சிஸ், குளிர்பானங்கள், எல்க்ட்டிரானிக் பொருட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள் அனைத்தும் விலை அதிகரிக்கும்.

உள்கட்டுமானம்

உள்கட்டுமானம்

துத்துக்குடி துறைமுக மேம்பாட்டிற்கு 11,635 கோடி நிதி ஒதுக்கீடு, துறைமுகங்களுக்கு அருகில் சிறப்பு பொருளாதார பகுதிகளை உருவாக்குதல், 15,000 கிலோமீட்டர் தொலைவிற்கு எரிவாயு பைப்லைனை அமைத்தல், இரண்டாம் மற்றும் முன்றாம் கட்ட நகரங்களில் விமான நிலையங்களை அமைத்தல், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, அந்திரா மற்றும் லடாக் பகுதியில் புதிய சேலார் மின் உற்பத்தி தளங்களை அமைத்தல்.

விவசாயம்

விவசாயம்

4% விவசாய வளர்ச்சியை செயல்படுத்த ஒரு குழு, விலை உயர்வை கட்டுப்படுத்த 500 கோடி ரூபாய், கிஸ்சான் தொலைகாட்சிக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, விவசாய சேமிப்பு உள்கட்டமைப்பு செயல்படுத்த 5000 கோடி ரூபாய், 3 சதவீத ஊக்க தொகை, 7 சதவீதத்தில் வங்கி கடன்.

பாதுகாப்பு துறை

பாதுகாப்பு துறை

2.30 இலட்சம் கோடி நிதி திரட்ட ஒப்புதல், ஒய்வூதியம் பெறும் ராணுவ அதிகாரிகளுக்கான ஒன் ரேங் ஒன் பென்ஷன் என்ற திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி, எல்லையோர பகுதிகளில் ரயில் வழிதடங்களை மேம்படுத்த ரூ.1000 கோடி, மேலும் இத்துறையில் 49% அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல்.

சுற்றுப்புற சூழல்

சுற்றுப்புற சூழல்

கங்கை நிதி கறையை சுத்தம் செய்ய நமாமி கங்கா திட்டத்திற்காக ரூ.2,037 கோடி, அதேபோல் கேதார்நாத், ஹரித்வார், கான்பூர், வாரணாசி, அலகாபாத், பாட்னா, டெல்லி நதிகரையை மேம்படுத்த ரூ.100 கோடி, மேலும் முப்பாட்டி காலத்து திட்டமான நிதிகளை இணைக்கு திட்டத்திற்கு ரூ.100 கோடி.

சுகாதாரம்

சுகாதாரம்

இலவச மருந்து திட்டத்தை செயல்படுத்துதல், 4 மாவட்டங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகல் மற்றும் கல்லூரிகள், 12 புதிய மருத்துவ கல்லூரிகள், 15 கிராமபுற ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஒப்புதல்.

வருமான வட்டி

வருமான வட்டி

குறைந்தபட்ச வருமான வட்டி அளவீட்டை 2.5 இலட்சமாக உயர்த்த ஒப்புதல், முத்த குடிமக்களுக்கான வருமானத்தில் 3 இலட்சம் வரை வரி விலக்கு, 80சி சட்டத்தின் கீழ் வரி தள்ளுபடி அளவை ரூ.1.5 இலட்சமாக உயர்வு, வீட்டு கடனுக்கான திட்டத்தில் தளர்வு.

விளையாட்டு

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு வீரர்ரகளை தயார் செய்ய ரூ.100 கோடி, நேஷ்னல் ஸ்போர்ட்ஸ் அகடேமியை உருவாக்குதல், ஐம்மு காஸ்மீர் பகுதியில் இருக்கும் உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு அரங்களை மேம்படுத்த ரூ.200 கோடி, மனிப்பூரில் விளையாட்டு பல்கலைகழகம் உருவாக்குதல்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+