டெல்லி: வெற்றிகரமாக ஏர் இந்தியா கடந்த வெள்ளிகிழமை ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தின் 26வது நிறுவனமாக இணைந்தது. ஏர் இந்தியா மற்றும் ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதியில் இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து ஸ்டார் அலையன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி மார்க் கூறுகையில் "எங்கள் நிறுவனத்தின் இது மிகவு்ம முக்கியமான நாள். இந்திய சந்தையில் எங்கள் வர்த்தகத்தை துவங்க ஒரு வலிமையான கையை தேடிவந்த நிலையில் எங்களுக்கு ஏர் இந்தியா கைகொடுத்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களும் இந்திய விமானச் சேவையில் அதிக லாபத்தை பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டு முயற்சியின் விளைவாக இனி ஏர் இந்தியா சுமார் 1300 இடங்களுக்கு பறக்க உள்ளது. இதுமட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு பறக்கவும் வர்த்தகத்தை துவக்கவும் வழி வகை செய்துள்ளது.
இனி ஏர்இந்தியா விமானங்கள் ஸ்டார் அலையன்ஸ் லோகோ கொண்டு பறக்கும். மேலும் ஏர் இந்தியா பயணிகள் நார்த் அமெரிக்கா, யூரோப், ஏசியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுலபமாக பறக்க முடியும்.


Click it and Unblock the Notifications