டெல்லி: வங்கி வைப்பு நிதிகளும் கடும் போட்டி அளித்து வந்த கடனீட்டு மியூச்சுவல் பண்டுகள் அதனுடை முக்கிய அம்சத்தை இழந்துள்ளது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமனறத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஈக்விட்டி அல்லாத மியூச்சுவல் பண்டின் நீண்ட கால முதலீட்டு திட்டத்தின் வரியை 10% இருந்து தற்போது 20% ஆக உயர்த்தியுள்ளார். இதனால் மியூச்சவல் பண்டு சந்தையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சந்தை முதலீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வரி அதிகரிப்பால் வங்கி வைப்பு நிதிகளில் முதலீடு அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது.
நீண்ட கால முதலீடு
ஈக்விட்டி அல்லாத மியூச்சுவல் பண்ட் திட்டங்களின் முதிர்வு காலத்தை 12 மாதங்களில் இருந்து 36 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது பண்டுகல் ஒரு வருடத்திற்கு பிறகு விற்கப்படும் போது பங்குகள் பட்டியலீடபட்டும் முன் 10 சதவீத வரியும், பட்டியலீடபட்ட பின் 20 சதவீதம் வரியும் வசூலிக்கப்படுகிறது
வரிச் சுமை
மேலும் இத்தகைய வரி சுமை மற்றும் நீண்ட கால முதிர்வு ஆகிய காரணங்களால் இத்துறையில் அதிகளவும் முதலீடு குறையும்.
ஈக்விட்டி அல்லாத மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன??
நிறுவன பண்டுகளில் 65 சதவீதத்திற்கு குறைவாக, சந்தையில் முதலீடு செய்யப்பட்டால் வரி வித்தியசத்திற்காக இத்தகைய பண்டுகள் ஈக்விட்டி அல்லாத மியூச்சுவல் பண்டாக கருதப்படும். இதில் கோல்டு பண்டு, அன்னிய நிறுவன பண்டுகள் என பலவும் அடங்கும்.
நிலையான முதிர்ச்சி திட்டங்கள்
இந்த பண்டுகள் நிலையான முதிர்ச்சி திட்டங்களை கடுமையாக பாதிக்கும், இந்திய தொழிற்துறை சொத்துக்களில் 15 சதவீதம் நிலையான முதிர்ச்சி திட்டங்கள், பொதுவாக நிலையான முதிர்ச்சி திட்டங்கள் முதலீட்டாளர்கள் டபுல் இன்டக்ஸ் பலன் பெற 365 நாட்களுக்கும் அதிகமான முதிர்வு காலம் கொண்டதாக இருக்கும்.
அதிக வட்டி விகிதம்
மேலும் திட்டங்களுக்கும் வருடத்திற்கு 8-9 சதவீதம் வட்டி அளிக்கிறது, அதனால் இத்தகைய திட்டங்கள் வங்கு வைப்பு நிதிகளுக்கும் கடுமையான போட்டி அளிக்கிறது. எனவே தற்போது இத்திட்டத்தில் முதிர்வு காலம் மற்றும் வரி அதிகரித்தால் இத்திட்டதின் மதிப்பு குறைவது நிச்சயம் என கே.பி.சி சொத்து மேலான்மை நிறுவனத்தின் தலைவர் பிரதிப் குமார் தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications