ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இப்போட்டியை பற்றி ஒரு முக்கிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இப்போடியில் வெல்லும் அணி வீரர்ரகளுக்கு என்ன கிடைக்கும் என்று பார்த்தால், பட்டம், மரியாதை, பெருமை என்ற ஒரு பக்கம் இருந்தாலும். கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் 35 மில்லியன் டாலர் கிடைக்கும். இன்றைய நாளில் விளையாட்டுத் துறை அனைத்தும் பணம் பார்க்கும் பகடைக்காயாக மாறியுள்ள நிலையில் இத்தகைய பெரும் தொகை கிடைக்கிறது. இந்த நிலைமை புட்பால் மட்டும் அல்லாமல் முக்கிய சில விளையாட்டுகளுக்கு மட்டும் உண்டு, அவை கிரிக்கெட், பாஸ்கட் பால், அமெரிக்கன் புட்பால் ஆகியவை.
ஃபிஃபா பெடரேஷன்
இப்போட்டியில் கோப்பையை வெல்ல ஜெர்மணி மற்றும் அர்ஜென்டீனா ஆகிய இரு மாபெரும் அணிகள் களத்தில் உள்ளன, இதில் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசு தொகையாக 35 மில்லியன் டாலரும், இரண்டாம் இடத்தில் இருக்கும் அணிக்கு 25 மில்லியன் டாலரும் ஃபிஃபா பெடரேஷன் அளிக்கிறது.
மற்ற அணிக்கு
திங்கட்கிழமை நடக்கும் 3வது மற்றும் 4வது இடத்திற்கான போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு 22 மில்லியன் டாரும், 4வது இடத்தை பிடிக்கும் அணிக்கு 20 மில்லியன் டாலரும் ஃபிஃபா பெடரேஷன் அளிக்கிறது. 3வது மற்றும் 4வது இடத்திற்கு பிரேசில் மற்றும் நெதர்லாந்து போட்டி போடுகிறது. மேலும் ஜெர்மனியுடன் மிகவும் மோசமான நிலை தோல்வியை தளுவிய பிரேசில் வெற்றி பெற கடும் வெறியில் உள்ளது.
மொத்த பரிசு தொகை
ஃபிஃபா பெடரேஷன் இந்த போட்டில் கலந்து கொண்ட 32 அணிகளுக்கு சுமார் 358 மில்லியன் டாலர் பரிசு தொகையாக அளித்துள்ளது.
பிரேசில் பொருளாதாரம்
ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியால் பிரேசிலின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்க அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இங்கு வாழும் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. பிரேசில் மக்களை பொருத்த வரை இந்த உலக ஒரு அத்திபழம் போலவே கருதுகின்றனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications