ரெட்மாண்ட்: உலகின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனம் என்று கேட்டால் நாம் கண்களை மூடிக்கொண்டு உடனே சொல்வது மைக்ரோசாப்ட் தான். இத்தகைய பெறு நிறுவனத்தின் சீஇஓவாக இருப்பவர் சத்ய நடெல்லா, ஒரு இந்தியர். இந்நிறுவனத்தின் பணியின் வேகத்தையும், தரத்தையும் உயர்ந்த இந்நிறுவனத்தில் அதிகப்படியான பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்யதுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது சத்யா அவர்களில் அறிவுறுத்தலின் படியே இந்த ஆட்குறைப்பு நடைபெறபோவதாக கருதப்படுகிறது.
மேலும் இது குறித்த ஒரு மெமோவும் நிறுவன ஊழியர்களுக்கு சத்யா அனுப்பியுள்ளார், அதில் நிறுவனத்தை குறைத்து, வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சத்யாவின் மறுப்பு
ஆனால் சத்யா அதுகுறித்து கூறுகையில் "ஆட்குறைப்பு போன்ற எந்த ஒரு எண்ணமும் இல்லை" என சத்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எங்கள் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனங்களை விட அதிகளவில் பணியாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்நிறுவனத்தில் 127,000 பேர் பணியாற்றுகின்றனர்.
புதிய வருடம்
இந்நிறுவனத்தின் புதிய நிதியாண்டு துவங்கிய நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து அதிகளவில் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை வருகிற ஜூலை 22ஆம் தேதி வெளிவரும் எனவும் இந்நிறுவனத்தின் முக்கிய கூட்டத்தில் தெரிவித்தார்.
உண்மை நிலை
நடெல்லாவின் மெமோவை பார்த்தால் ஆட்குறைப்பு என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாது போன்றே உள்ளது. ஆனால் நிறுவனத்தில் ஆட்குறைப்பு கண்டிப்பாக இருக்கும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
வால் ஸ்ட்ரீட்
வால் ஸ்ட்ரீட் கணிப்பின் படி நடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் தரத்திற்காக அதிகப்படியான பணியாளர்களை வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது. இது கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த ஆட்குறைப்பை விட அதிகமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
உயர் அதிகாரிகள்
மேலும் நடெல்லா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை தொழிற்நுட்ப முறையில் நிறுவன தயாரிப்புகளை எப்படி முன்னேற்றுவது என்பதை திட்டமிடவும் வலியுறுத்தியுள்ளார்.
நோக்கியா இணைப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நோக்கியா நிறுவனம் இணைந்ததை தொடர்ந்து இதன் வர்த்தகம் மற்றும் தயாரிப்பை அதிகரிக்க அதிகப்பிடியான ஆட்கள் மற்றும் அறிவுத் திறன் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் பிங் மற்றும் எக்ஸ்-பாக்ஸ் தயாரிப்புகளை மெருகேற்றவும் முடிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications