ஆந்திராவை மறந்த பெருநிறுவனங்கள்!! தொடர் வளர்ச்சி பாதையில் தெலூங்கானா..

ஹைதராபாத்: ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்த பிறகு இருமாநிலங்களும் தங்களது வருவாயை பெறுக்கிக்கொள்ள பல ஐடியாக்களை கையாளுகின்றனர். இதில் முக்கியமான ஒன்று பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களை தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய வைப்பதும் ஒன்று.

சில வாரங்களுக்கு முன்பு அந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயடு மைக்ரோசாப்ட் உட்பட உலகின் பல முன்னனி நிறுவனங்களுக்கு தங்கள் மாநிலத்தில் கடையை விரிக்குமாறு (கெஞ்சாத குறையாக) கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் தெலுங்கானாவில் ஐடிசி நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீட்டில் ஒரு பேப்பர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல் முதலமைச்சரான சந்திரசேகர ராவ் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியில் ராவ்

மகிழ்ச்சியில் ராவ்

இந்த தொழிற்சாலையின் மூலம் தெலுங்கானாவிற்கு அதிக வருவாய் கிடைக்கும், மேலும் இத்தொழிற்சாலைக்கான நிலங்களை தயார் செய்து தரவும் தயார் நிலையில் உள்ளதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

 ஐடிசி நிறுவனம்

ஐடிசி நிறுவனம்

அதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் உயர் அதிகாரி பிரதீப் தோப்லே முதல் அமைச்சரை சந்தித்த போது தெலுங்கானாவில் ஐடிசி நிறுவனம் மேலும் உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் துறை சார்ந்த நிறுவனங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதுமட்டும் அல்லாமல் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் யூக்கலிப்டஸ் தோட்டத்தை அமைக்கவும் திட்டம் தீட்டியுள்ளது ஐடிசி நிறுவனம். (லக்ஷ்மி ஒரு முறை தான் கதவை தட்டும்..)

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரியான பாஸ்கர் பிரமநிக், ராவ் அவர்களை சந்தித்து நிறுவனத்தை மேலும் விரிவாக்கும் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து விதமான உதவிகளும் அரசு செய்யும் எனவும் ராவ் தெரிவித்துள்ளார்.

ஹிந்துஜா குருப்

ஹிந்துஜா குருப்

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஜா குருப் தெலுங்கானவில் நிறுவனங்களை அமைக்க உறுதி செய்துள்ளது.

பாபுவிற்கு பை பை...

பாபுவிற்கு பை பை...

சந்திரபாபு நாயடு பாக்கு வெத்தலை வைத்து அழைத்தாலும் பெரு நிறுவனங்கள் ஆந்திராவில் கால் வைக்க தயங்குகின்றனர். மேலும் தெலுங்கான ஆந்திராவில் இருந்து பிரித்த பிறகு பல பரிமானங்களில் விரிவாக்கம் ஆடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+