மும்பை: பொது துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி காப்பீட்டு நிறுவனம், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பிலான இன்போசிஸ் நிறுவன பங்குகளை வாங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்நிறுவனத்தின் மோசமான செயல்பாட்டின் காரணமாக இந்நிறுவன பங்குகளை பெரும் அளவில் குறைத்தது குறிப்பிடதக்கது. தற்போது இந்த நிலைமை சரியான நிலையில் ஏற்கனவே இன்போசிஸின் பங்குகளை வைத்துள்ள எல்ஐசி, தற்போது 3.82% அதிகமான பங்குகளை வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு அதிகம்
பங்கு சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள எல்ஐசி நிறுவனம், கடந்த 2013 ஜூன் மாதத்தில் 6.72% மதிப்பிற்கு இன்போசிஸின் ஸ்டேக்குகளை வைத்திருந்தது.
மளமள குறைவு
இதைத் தொடர்ந்து கடந்த 3 காலாண்டுகளில் தன் ஸ்டேக்குகளை மளமளவெனக் குறைத்து கொண்டதால், இந்நிறுவனத்தில் சொத்தை பெருக்கிக்கொள்ள எல்ஐசி நிறுவனம் இன்போசிஸ் நிறுவனம் ரூ.1,100 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளது.
உள் நாட்டில் ஓ.கே.
எல்ஐசி தவிர DIIs எனப்படும் உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களும் இன்போசிஸிடமிருந்து அதிக பங்குகளை (14.08%) ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வாங்கியுள்ளனர். அதற்கு முந்தைய காலாண்டில் இதன் மதிப்பு 13.66% மட்டுமே!
வெளி நாடுகளில் செல்லவில்லை
ஆனால் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வாங்கியுள்ள இன்போசிஸின் பங்குகளின் மதிப்பு (41.58%) அதற்கு முந்தைய காலாண்டு மதிப்பை (42.10%) விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் பங்கு மதிப்பு
இன்றைய பங்கு சந்தையில் இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.3,225.45 ஆகும்.
ஏன் இந்த திடீர் பர்சேஸ்?
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாக விஷால் சிக்கா நியமிக்கப்பட்ட பின்னர் தான் எல்ஐசியின் இந்த பர்சேஸ் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அவர் அடுத்த மாதம் துவக்கத்தில் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் கண்ட பங்கு மதிப்பு
பதவிக்காலம் முடிவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே இன்போசிஸிலிருந்து அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி வெளியேறினார். அதிலிருந்து அதன் பங்கு மதிப்புகள் மிகவும் மோசமாக ஆட்டம் கண்டிருந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் அவர் இன்போசிஸிற்குள் நுழைந்தார். அவர் மீண்டும் வந்த பின்னர், அந்த நிறுவனத்திலிருந்து 13 உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications