பிரேசில்: புட்பால் ஆரவாரம் முடிந்த நிலையில் பிரேசிலில் நடக்கும் மிகப்பெரிய பிரிக்ஸ் கூட்டத்திற்காக உலகின் கண்கள் மொத்தமும் பிரேசில் பக்கம் திரும்பியுள்ளது. இந்த கூட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஆப்ரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா மற்றும் இக்கூட்டமைப்பின் தலைவர் தில்மா ரோஸப் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ளஉள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பு, அமைக்கும் புதிய பிரிக்ஸ் டெவலப்மென்ட் பாங்கில் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எந்த ஒரு நாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் சரி பங்காக முதலீடு செய்ய வேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
வித்தியாசம் தேவையில்லை
உலகின் மிகப்பெரிய வங்கிகளான சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி ஆகியவற்றில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அதிக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் இத்தகைய வங்கிகளில் பிற நாடுகளுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியதுவம் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையை ஒழிக்கும் நிலையில் இந்த வங்கியில் சரி விகிதமாக முதலீடு செய்ய வேண்டும் என்ற கருத்தில் இந்தியா உறுதியாக இருக்கிறது.
இரண்டு நாள் கூட்டம்
இந்த இரண்டு நாள் கூட்டத்தில் மோடி பல பிரச்சனைகளையும் முன்னேற்றத்திற்கான வழிகளையும் களைய உள்ளார் இதில் முக்கியமாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நிதி கட்டமைப்பு ஆகியவை இடம் பெறுகிறது.
பிரிக்ஸ்
இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து புதிய வங்கி ஒன்றை அமைக்க உள்ளது.
பிரிக்ஸ் டெவலப்மென்ட் வங்கி
இந்த வங்கிக்கான இந்தியாவின் ஒப்புதலை கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் இந்த அமைப்பு பெற்றது, துவக்க முதலீட்டாக இதில் 50 பில்லியன் டாலர் கொண்டு துவக்கப்படும் எனவும் பின்னாலில் பிற நாடுகள் இணையும் போது இது 100 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications