மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் வங்கி சில குறைந்த கால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதமாக குறைத்துள்ளது. மேலும் இந்த வட்டி குறைப்பு இந்தியாவின் மற்ற வங்கிகளும் நடைமுறைபடுத்தும் என தெரிகிறது.
ஸ்டேட் வங்கியின் 7-179 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி வகிதம்
இந்த வட்டி மாற்றம் வருகிற ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. மேலும் 60 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 0.25 வட்டி குறைத்து 6.25 சதவீதமாக வட்டி அளிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
கடந்த மாதம் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்து நோக்கில் தனது நிதிக்கொள்ளையில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. இதனால் வங்கிகளும் தனது வட்டி வகிதத்தில் எந்தொரு மாற்றமும் செய்யமல் அப்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது வங்கி செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் ஸ்டேட் வங்கி தனது வைப்பு நிதிகளுக்கான வட்டி வகிதத்தில் குறைவு செய்துள்ளது.
ரெப்போ விகிதம்
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி வகிதம் (ரெப்போ விகிதம்) நிதிக்கொள்கையில் 8 சதவீதமாக உள்ளது. அதேபோல் சிஆர்அர் 4 சதவீதமாக உள்ளது.
வங்கிகளின் தலைவலி
மேலும் இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு வராக் கடன் வகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளதால், அதை கட்டுப்படுத்த நிதியமைச்சகம் ஒரு தனி குழு ஒன்றை அமைத்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications