சத்யம் ராஜூவிற்கு இறுதி தீர்ப்பு வழங்கிய செபி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய சாப்ட்வேர் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்த சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் லாபத்தில் பல முறைகேடுகளை செய்து பல ஆயிரம் கோடிகள் சுருட்டியது. இதனை மோப்பம் படித்த சிபிஐ இந்நிறுவனத்தின் 5 உயர் அதிகாரிகளை கைது செய்தது.

சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் மீதும் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இறுதி தீர்ப்பு அளித்தது.

14 வருட தடை

14 வருட தடை

சத்யம் நிறுவனத்தின் நிறுவனரான பி.ராமலிங்க ராஜூ மற்றும் 4 உயர் அதிகாரிகளுக்கு அடுத்த 14 வருடத்திற்கு சந்தையில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட்டியுடன் ரொக்கம்

வட்டியுடன் ரொக்கம்

முறைகேடாக சம்பாதித்த 1849 கோடி ரூபாய் மற்றும் அதற்கான வட்டி தரும்ப செபிக்கு செலுத்த வேண்டும். அதற்கான முன்பணம் அடுத்த 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் மொத்த தொகைக்கு வருடத்திற்கு சுமார் 12 சதவீதம் வட்டி செலுத்தும் படியும் செபி தெரிவித்துள்ளது.

ஜனவரி 2009

ஜனவரி 2009

நாட்டின் மிகப்பெரிய மோசடி கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பின் இந்நிறுவனத்தின் நிறுவனரான ராமலிங்க ராஜூ தான் நிறுவன கையேடுகளை மாற்றியும், நிறுவன லாபத்தில் குறைவாக காட்டியும் பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டியதை ஒப்புக்கொண்டார்.

சிபிஐ

சிபிஐ

அவரின் கைதிற்கு பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணயில் சுமார் 3 குற்ற பத்திரிக்கை வெளியிட்டப்பட்டது.

நிறுவனத்தின் நிலை

நிறுவனத்தின் நிலை

அதன் பின் இந்நிறுவனம் நிலைமை தலைகீழாக மாறியது. இந்நிறுவனத்தின் ஊழியர்கள் நிர்கதியாக்கப்பட்டனர், பங்கு விலை தொடர் சரிவு என பல சிக்கல்களை சந்தித்தது. சில மாதங்களுக்கு பிறகு இந்நிறுவனம் ஏலத்தில் விடும் அளவிற்கு வந்தது, பின்பு அதை டெக் மஹிந்திரா நிறுவனம் கைபற்றியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Satyam Scam: Sebi bars Raju, 4 others from capital markets; slaps Rs 1,849 cr penalty

Passing its final order on the multi-crore accounting Satyam computer scam, market watchdog Sebi on Tuesday barred Satyam founder B Ramalinga Raju, four other executives from capital markets for 14 years.
Story first published: Wednesday, July 16, 2014, 11:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X