இங்க சரக்கு ரொம்ப "சீப்" போனா அள்ளிடலாம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மும்பையில் ஏர்போர்ட்டில் புதிதாக மேம்படுத்தப்பட்ட டி2 முனையத்தில் இனி உயர் தர சரக்கு பாட்டில்கள் ஏர்போர்ட் டியூட்டி ஃபிரி ஷாப்பில் சிங்கப்பூர், துபாய் மற்றும் லண்டன் ஏர்போர்ட் கடைகளை விட குறைவான விலையில் கிடைக்கும்.

டியூட்டி ஃபிரி விற்பனையாளரான Nuance Group மும்பை டி2 முனையத்தில் 13,000 சதுரடில் ஒரு புதிய கடையை திறந்துள்ளது. இதில் ஜானி வாக்கர் உட்பட பல பிராண்டு சரக்குகள் அதிக தள்ளுபடியில் விற்பனை செய்துவருகிறது.

தள்ளுபடி

தள்ளுபடி

இக்கடையில் இருக்கு 80 சதவீத சரக்குகளுக்கு 10-30 சதவீத வரையிலான தள்ளுபடி கிடைக்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை விட குறைவான விலையில் இங்கு மதுபான பாட்டில்களை வாங்க முடியும் என இந்நிறுவனத்தின் தலைவர் அனிர்பன் டட்டா சவுதிரி தெரிவித்தார்.

பெருவாரியான லாபம்

பெருவாரியான லாபம்

இந்த தள்ளுபடி விலை குறித்து அவர் பேசும் போது "எங்கள் நிறுவனத்தில் மிட்டாய், வாசனை திரவியங்கள், அழகுசாதன மற்றும் புகையிலை என பல பொருட்கள் விற்பனை செய்து வந்தாலும் அதிகளவில் விற்பனை ஆவது மதுபானங்கள் தான். இதனால் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படுவது போலவே இந்தியாவிலும் குறைந்த விலையில் விற்பனையை துவங்கியுள்ளோம், இதனால் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கவர் எங்களுக்கு ஒரு நல்ல சந்தர்பமாக இருக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

ஜானி.. ஜானி.. எஸ் பாப்பா..

ஜானி.. ஜானி.. எஸ் பாப்பா..

750 மில்லி ஜானி வாக்ர் பாட்டில் வெளி மார்க்கெட்டில் 5000 ரூபாய்க்கு குறைவாக வாங்க முடியாது, ஆனால் இந்த கடையில் வெறும் 2400 ரூபாய் மட்டும் தான். அதேபோல் வாசனை திரவியங்களான சேனல் மற்றும் டியோர் பொருட்களுக்கு 20 சதவீத தள்ளுபடி இங்கு கிடைக்கும்.

விலை உயர்வு

விலை உயர்வு

இந்நிறுவனத்தில் விற்பனைக்கு இருக்கும் பொருட்களில் 95 சதவீத பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே, எனவே இறக்குமதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், விரி ஆகியவற்றினால் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த நிலைமை முற்றிலும் மாறுபட்டவை.

விமான பயனிகள்

விமான பயனிகள்

மேலும் இத்தகைய தள்ளுபடி சரக்கு பாட்டில்களுக்கு மட்டும் இல்லை இக்கடையில் இருக்கு பெருபாலன பொருட்களுக்கும் உண்டு. மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாலும், விமான பயன வாடிக்கையாளர்களை கவரவும் இத்தகை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airport retailer Nuance Group offers up to 30% discounts

Buying single malt brands at Mumbai’s new T2 airport is going to be almost 30 per cent cheaper than those at airport duty-free shops at neighbouring Singapore, Dubai and even London’s Heathrow.
Story first published: Thursday, July 17, 2014, 16:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X