டெல்லி: மத்திய அரசின் தேடுதல் வேட்டையில் (ஐடி ரைடு) கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.1 இலட்சம் கோடி கருப்பு பணத்தை கண்டறியப்பட்டுள்ளது. அது 2012-13ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் கிடைத்த பணத்தை விடவும் 2 மடங்கு அதிகமானது எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை வரி ஏய்ப்பை தடுக்கும் பொருட்டு நிறுவனங்கள், தனி நபர், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் ஆகியவிற்றல் சோதனை நடத்தி வந்தது.
1 இலட்சம் கோடி
வருமான வரி துறை அளித்த தகவலின் படி, இந்த தேடுதல் வேட்டையில் 2013-14ஆம் நிதியாண்டில் கிடைத்த பணம் மட்டும் ரூ.10,791.63 கோடி ஆகும். அதேபோல் இதே காலகட்டத்தில் சர்வே மூலம் கண்டறியபட்ட பணம் ரூ.90,390.71 கோடி என்பது குறிப்பிடதக்கது.
கருப்பு பணம்
இந்தியார்களின் கருப்பு பணம் வெளிநாடுகளில் மட்டும் அல்ல இந்தியாவில் பல உருவங்களில் உள்ளது. இதனை களையவே இந்த தேடுதல் வேட்டைகள் அவ்வபோது நடந்து வருகிறது. வருமான வரித்துறை 2013-14ஆம் காலகட்டங்களில் தனி நபர், நிறுவனங்கள், கார்ப்ரேட் நிறுவனங்கள் மற்றும் இதர நிதியியல் நிறுவனங்களில் இத்தகைய தேடலை மேற்கொண்டுள்ளது.
ஐடி ரைடு
இத்தகைய ரைடுகள் நிறுவனங்கள் மட்டும் அல்லாது சில பெரும் புள்ளிகளின் வீடுகளிலும் நடக்கிறது. இதில் இரண்டு விதமான சோதனைகள் உள்ளது, தேடுதல் மற்றும் சர்வே. தேடுதல் என்பது நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சோதனை செய்வது. ஆனால் சர்வே என்றால் நிறுவனங்களில் செய்யப்படும் சோதனை மட்டுமே ஆகும்.
வளர்ச்சி
கடந்த 2012-13ஆம் நிதியாண்டில் வருமான வரித்துறை இத்தகைய ஐடி ரைடில் கிடைத்த பணம் 29,628 கோடி மட்டுமே, ஆனால் 2013-14ஆம் நிதியாண்டில் கிடைத்த பணம் 1,01,181 கோடி. இந்த வளர்ச்சியை பார்க்கும் போது இந்தியாவில் பல ஆயிரம் கோடி கணக்கில் கருப்பு பணம் பதுங்கி உள்ளது தெரிகிறது.
எண்ணிக்கை
வருமான வரித்துறை ஐடி ரைடுக்காக 2012-13ஆம் நிதியாண்டில் சுமார் 3,889 வாரண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. 2013-14ஆம் நிதியாண்டில் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications