நியூயார்க்: முதல் முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனம் டிஜிட்டல் விளம்பர வருவாயில் யாஹூ நிறுவனத்தை பன்னுக்கு தள்ளியுள்ளது. இன்று இண்டர்நெட், உலகின் மூலை முடுக்குகளுக்கும் சென்றுள்ள நிலையில், இதை சாதுரியமாக பயன்படுத்தி பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்து வருகிறது. இதன் மூலம் யாஹூ, மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் என பல நிறுவனங்கள் பணத்தை கோடு கணக்கில் சம்பாதித்து வருகிறது.
இண்டர்நெட் யுகத்தில் துவக்கத்தில் யாஹூ நிறுவனம் ஒரு ஜாம்பவான். ஆனால் காலப்போக்கில் மற்ற நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்நிறுவனம் திணறி வருகிறது.
யாஹூ
யாஹூ நிறுவனத்தின் வளம்பர வருவாய் கடந்த வருடம் 2.7 சதவீதம் அதிகரித்து 3.53 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் குறைவு.
மைக்ரோசாப்ட்
நாடெல்லா தலைமை வகிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிஜிட்டல் வருவாயில் 20 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் விளம்பர வருவாய் 3.56 பில்லியன் டாலராக உள்ளது. மொத்த சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு 2.54 சதவீதம் என்பது குறிப்பிடதக்கது.
அசைக்க முடியாத இடத்தில் கூகுள்
ஆயிரம் நிறுவனங்கள் இத்துறையில் இருந்தாலும் முடிசூடா மன்னனாக இருப்பது கூகுள் நிறுவனம் தான். உலகின் மொத்த விளம்பர சந்தையில் கூகிள் நிறுவனத்தின் பங்கு 31.45 சதவீதம். அதேபோல் குறைந்த காலத்தில் உலகின் முகவரியை மாற்றிய பேஸ்புக் நிறுவனமும் இத்துறையில் முக்கிய பங்காற்றி வருகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மொத்த சந்தை
உலகில் இண்டர்நெட் பயண்பாட்டு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த வருடம் டிஜிட்டல் விளம்பர வருவாய், கடந்த வருடத்தை விட சுமார் 16.7 சதவீதம் உயர்ந்து 140 பில்லியன் டாலராக உயரும் என சர்வே சொல்கிறது. அதே போல் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் அதிகப்படியான வளர்ச்சியை சந்திக்கும் எனவும் இந்த சர்வே கூறுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications