டெல்லி: ஏர்செல் தன்னுடைய அதிவேக 4ஜி சேவைகளை ஆந்திரா, அசாம், பிகார் மற்றும் ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இதையடுத்து, ஏர்டெல்லுக்குப் பின் இந்தியாவில் 4ஜி சேவைகளை அளிக்கும் 2வது நிறுவனம் என்ற பெயரை ஏர்செல் பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஏர்செல் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரி அனுபம் வாசுதேவ் கூறுகையில் தொலைத் தொடர்பில் முக்கியத் தொழில்நுட்பங்களான 2ஜி மற்றும் 3ஜி சேவைகளை ஏர்செல் ஏற்கனவே வழங்கிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது 4ஜி சேவைகளையும் தொடக்கியுள்ளது.
வயர்லெஸுக்கு மட்டும் 4ஜி
இந்த 4ஜி சேவை ஏர்செல் வயர்லெஸ் உபகரணங்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான். மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. அவர்ளுக்கும் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிவிரைவு இணைப்பு
இந்த 4ஜி வயர்லெஸ் சேவைகள் மூலம் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு அதிவிரைவு நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும். அவர்கள் வேலைபார்க்கும் இடங்களிலும் சரி, வீடுகளிலும் சரி... அவர்களுக்கு முன்பிருந்ததைவிட விரைவாக தகவல் கிடைக்கும்.
ஏர்டெல்லுக்கு அடுத்து...
மொபைல் போன் வரலாற்றில் நாட்டிலேயே ஏர்டெல் நிறுவனம்தான் அதிகமான வாடிக்கையாளர்களையும் வருமானத்தையும் பெற்று வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே கொல்கத்தா, பெங்களூர், புனே, சண்டிகர் ஆகிய நகரங்களில் 4ஜி சேவைகளை அளித்து வருகிறது. விரைவில் குர்கானிலும் இந்த சேவையை அளிக்கவுள்ளது.
2வது 4ஜி நிறுவனம்
தற்போது, ஏர்டெல்லுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 4ஜி சேவைகளை அளிக்கும் 2வது நிறுவனம் என்ற பெயரை ஏர்செல் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் டெலிகாம்
ஏர்டெல் மற்றும் ஏர்செல் நிறுவனங்களைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் 4ஜி சேவைகளைத் தன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications