டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நாட்டின் தலைநகரமான டெல்லியின் பட்ஜெட்டை அறிவித்தார். இந்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 36,776 கோடி ரூபாய். இதில் முக்கிய இடத்தை பிடிப்பது மின்சாரா மானியம்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு கவர்னர் ஆட்சி வந்தது. ஆளுநர் ஆட்சி தொடர்ந்து வருவதால் அந்த மாநிலத்துக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உருவானது. இதனை தொடர்ந்து டெல்லிக்கான பட்ஜெட்டை வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் அறிவித்தார்.
37,000 கோடி ரூபாய்
கவர்னர் ஆட்சியில் இருக்கும், நாட்டின் தலைநகரமான டெல்லிக்கு 36,776 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பட்ஜெட்டை தயார் செய்தது நிதியமைச்சகம். இதை இன்று காலையில் நாடாளுமன்றத்தில் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பித்தார்.
ரோஹினி பகுதி
டெல்லியின் ரோஹினி பகுதியை மேம்படுத்தும் நோக்கில் இங்கு உயர் தர போருந்துகள், சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை அமைக்க இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய வரி
டெல்லியில் புதிதாக எந்த துறையிலும் வரியை கூட்டவும் இல்லை குறைக்குவும் இல்லை. இதனால் வரி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் நாட்டின் தலைநகரமான டெல்லியில் அதிகளவில் மக்கள் திறந்தவெளியில் தங்குகின்ழனர், இந்த இக்கட்டான நிலையை போக்கும் வகையில் அவர்களுக்கு இரவில் தங்குவதற்கு பாதுகாப்பான இடத்தை அமைக்கவும் இந்த பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மின்சார மானியம்
டெல்லியில் குறைவாக மின்சாரத்தை உபயோகிக்கும் மக்களுக்கு மின்சார மானியமாக ஒரு யூனிட்க்கு 0.80 ரூபாய் கொடுக்கப்படுகிறது, இதை இப்போது 1.20 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சாரத்துறைக்கு மட்டும் 260 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications