முட்டாள்கள் தினத்தில் துவங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம்..!

சென்னை: இன்றைய உலகம் ஒரு பிராண்டட் உலகம் என்று சொன்னால் மிகையாகது. இந்த உலகத்தில் நேற்றும், இன்றும் நிகழ்ந்த, நிகழ்ந்து வரும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த பிராண்ட்கள் தான் காரணம்.

இவை உலகின் நடைமுறையை மாற்றியமைக்கவும், மனிதர்களின் மேல் தாக்கங்களை ஏற்படுத்தவும் செய்கின்றன. இன்றைய இளைஞர்கள் பிராண்ட்களால் தான் உருவாக்கப் பட்டுள்ளார்கள், உண்மையை சொன்னால் இத்தகைய பிராண்டு பொருட்கள் அவர்களின் மேல் திணிக்கப்பட்டவையே.

இந்த பிராண்டு பொருட்களில் மேல் உள்ள ஆசையை மேல்நாடுகளில் இது ஒரு மனநோய் எனவும் கூறுகின்றனர்.

நாம் எல்லா பிராண்டு பொருட்களையும் வாங்குகிறோம் மற்றும் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் விருப்பமான வழியில் முன்னேறிச் செல்கிறோம். இந்த பிராண்ட்களை வாங்குவதற்காகவே கடின உழைப்பின் பலனாக கிடைத்த பணத்தையும் செலவிடுகிறோம். இந்த வகையில் உலகை மாற்றியமைத்த 8 பிராண்ட்களைப் பற்றி இங்கு காண்போம்.

டிஸ்னி

டிஸ்னி

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு மக்கள் தொடர்பு நிறுவனமான டிஸ்னியன் பிராண்ட் மதிப்பு 34,538 மில்லியன் டாலர்களாகும். 90 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களின் விருப்பத்திற்கேற்ற, புகழ் பெற்ற பிராண்டாக இருந்து வரும் டிஸ்னி, குடும்ப பொழுதுபோக்குகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக உள்ளது. 1920-களில் ஒரு சிறிய கார்ட்டூன் தயாரிப்பு ஸ்டுடியோவாக தொடங்கப்பட்ட டிஸ்னி, இன்று ஒரு உலகளாவிய நிறுவனமாக பரந்து விரிந்துள்ளது.

ஸ்டார்பக்ஸ் (Starbucks)

ஸ்டார்பக்ஸ் (Starbucks)

அமெரிக்கவிலுள்ள மிகப்பெரிய காபி நிறுவனமான இது வாஷிங்டனில் உள்ள சியாட்டிலில் தலைமையிடமாக கொண்டு உலக முழுவதும் செயல்பட்டு வருகிறது. உலகின் மிகச்சிறந்த காபியை நீங்கள் தேடுபவர்களாக இருந்தால், அங்கே ஸ்டார்பக்ஸ் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இது உலகளவில் மிகவும் மதிக்கப்பட்டு வரும் பிராண்டுகளில் ஒன்று.

மெக்டொனால்டு

மெக்டொனால்டு

சுமார் 85,706 மில்லியன் டாலர்களை பிராண்ட் மதிப்பாக கொண்டிருக்கும் மெக்டொனால்டு நிறுவனம், உலகிலேயே மிகப்பெரிய பாஸ்ட் புட் ஹம்பர்கர் உணவு சங்கிலி நிறுவனமாக உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டிருக்கும் இந்நிறுவனம், 119 நாடுகளிலுள்ள தனது 35,000 கிளைகளில், 68 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. கடந்த 61 ஆண்டுகளாக பரந்து விரிந்திருக்கும் மெக்டொனால்டு நிறுவனத்தின் வியாபார சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

கம்ப்யூட்டர்கள், வன்பொருட்கள், மென்பொருட்கள் மற்றும் போர்ட்டபிள் சாதனங்களான ஐபோன், ஐபாட், மேக், ஐபேட், ஆப்பிள் டிவி, சர்வீஸ் மற்றும் உதவிகள் போன்றவற்றை செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக ஆப்பிள் உள்ளது. மேலும், டிஜிட்டல் வரைவுகள் மற்றும் அப்ளிகேஷன்களான ஐடியூன் ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர், ஐபுக் ஸ்டோர் மற்றும் மேக் அப் ஸ்டோர் ஆகியவற்றையும் விற்கும் நிறுவனமாக ஆப்பிள் உள்ளது.

கோகோ-கோலா

கோகோ-கோலா

இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 80,683 மில்லியன் டாலர்களாகும். உலகில் வேறு எந்த பிராண்டையும் விட மிகவும் நன்றாக அறியப்பட்டிருக்கும் பிராண்டாக கோகோ-கோலா உள்ளது. ஆல்கஹால் இல்லாத பிவேரேஜ் பிராண்ட்களான கோகோ-கோலா, டையட் கோக், ஃபாண்டா மற்றும் ஸ்பிரைட் ஆகியவற்றிற்கான சந்தையில் முன்னணி நிறுவனமாக கோகோ-கோலா உள்ளது.

பேஸ்புக்

பேஸ்புக்

கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இணைய வழி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை உருவாக்கியவர் மார்க் ஸக்கர்பெர்க் என்பவராவார். இந்த பிராண்டின் மதிப்பு சுமார் 35,740 மில்லியன்களாகும். பேஸ்புக் அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாத காலத்திற்குள் 1 மில்லியன் பேர் அதைப் பயன்படுத்தி, நட்பு கொள்ளவும், டேட்டிங் செல்லவும், ஷாப்பிங் செய்யவும் தொடங்கி விட்டார்கள் என்ற தகவலே போதும், இந்த பிராண்டின் அணுகுமுறையை புரிந்து கொள்வதற்கு! ஊலகின் மிகப்பெரிய சந்தையிடத்தை பேஸ்புக் உருவாக்கியுள்ளது. இணையம் வழியாகவே பொருட்களின் விலையை எளிமையாக பேச வகை செய்த பேஸ்புக், மக்களின் தொடர்பு முறைகளை என்றுமில்லாத வகையில் மாற்றமடையச் செய்தது என்றால் அது மிகையல்ல.

அமேசான்

அமேசான்

உலகின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனம், டிவிடிகள், VHS-கள், மென்பொருட்கள் மற்றும் வீடியோ கேம்களை விற்று வருகிறது. இணையவழி கணிணி செயல்பாட்டு சேவைகளை வழங்கும் மிகச்சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சந்தையிலுள்ள அனைத்து போட்டியாளர்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டது அமேசான் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு 65,255 மில்லியன் டாலர்களாகும்.

கூகிள்

கூகிள்

மென்பொருளை முன்னிறுத்திய நிறுவனமான கூகிள் அதன் வாடிக்கையாளர்களைப் பற்றி மிகவும் யோசித்த நிறுவனமாகும். இதன் காரணமாகவே மேப்ஸ், மெயில், ஷாப்பிங் மற்றும் பல அப்ளிகேஷன்களை கூகிள் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் இலாபத்தில் பெரும்பகுதி விளம்பரங்களின் மூலம் (AdWords) கிடைக்கிறது. பல்வேறு புதுமையான செயல்களால் ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனம் தன்னை முன்னேற்றிக் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வன்பொருள் உலகில் புரட்சியை ஏற்படுத்தி வரும் கூகிள் கண்ணாடியின் பிராண்ட் மதிப்பு சுமார் 158,843 மில்லியன்களாகும்.

விசா

விசா

நிதி சேவைகளை வழங்கும் பிராண்ட்களில் மிகவும் நம்பகமான மற்றும் மிகவும் அறியப்பட்ட நிறுவனமாக விசா உள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மொபைல் பேமண்ட்களைப் பொறுத்தவரை விசா-வை மிஞ்ச யாரும் இல்லை. வேகமாக கார்டுகளை தேய்த்து, பொருட்களை வாங்கச் செய்ததன் மூலமாக விசா ஒற்றை நிறுவனமாக இருந்து உலகின் போக்கில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது எனலாம். இன்றைய நாளில், அமெரிக்கா முழுவதும் சுமார் 278 மில்லியன் விசா கார்டுகளும் மற்றும் உலகம் முழுவதும் சுமார் 522 மில்லியன் விசா கார்டுகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+