பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவு இல்லை.. நிதியமைச்சகம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வங்கிகளில் அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பை வைத்திருக்க வேண்டும் என்ற பி.ஜெ.நாயக் கமிட்டியின் பரிந்துரையை அரசு நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை அதிகமாக கொடுக்கும் எண்ணத்துடன் இந்த பரிந்துரையை நாயக் கமிட்டி செய்திருந்தது.

 

பங்குகளை 50 சதவீதத்திற்கு குறைத்தால் வங்கிகளின் கட்டுப்பாட்டு தனியார் நிறுவனங்களிடத்தில் செல்லும், இதனால் வங்கிகளில் மத்திய அரசின் தலையீடு குறைந்துவிடும், மேலும் பணியாளர்களுக்கு பணி உத்திரவாதம், மக்களுக்கு வங்கிகளின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடும்.

கமிட்டியின் முடிவுகள்

கமிட்டியின் முடிவுகள்

'பி.ஜெ. நாயக் குழுவினரின் (P.J.Nayak Committee) இந்த குறிப்பிட்ட பரிந்துரையை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில், குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகளை அரசு வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று நிதி சேவைகள் துறையின் செயலர் திரு ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.

வங்கி பங்கு இருப்பில் மாற்றம் இல்லை

வங்கி பங்கு இருப்பில் மாற்றம் இல்லை

'பொதுத்துறை வங்கிகளின் பங்கு இருப்பை எந்த விதமான மாற்றமும் இல்லைமல் அப்படியே வைத்திருக்ப் போவதாக பட்ஜெட்டிலும் தெளிவாக அரசு எடுத்துச் சொல்லியிருக்கிறது', என்று PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இன்டஸ்ட்ரீ நடத்திய ஒரு நிகழ்வின் போது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பதவிகாலம்
 

பதவிகாலம்

எனினும், இந்த குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டு இருந்த அதிகளவு தன்னாட்சி கொடுக்கும் விஷயங்களில் ஒன்றாக, தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்யும் விஷயங்களை அரசு கவனிக்கும் என்பது உண்மை.

பணிக்காலாம் நீட்டிப்பு

பணிக்காலாம் நீட்டிப்பு

'மேலாண் இயக்குநர்களுக்கு பதவிக்காலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முயற்சித்து வருகிறோம். நாங்கள் ஐந்து-ஆண்டுகள் பதவிக்காலத்தை முன்மொழிந்திருக்கிறோம். அதே போல, தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களை பிரிக்கவும் பரிந்துரைத்துள்ளோம். இந்த முன்மொழிவுகள் பற்றிய முடிவுகளை, இனிமேல் தான் எடுக்க வேண்டும்.' என்று அவர் குறிப்பிட்டார்.

தனி இயக்குநர்கள்

தனி இயக்குநர்கள்

துறை சார்ந்த அறிவுடைய, தனி இயக்குநர்களை நியமித்து, போர்டை வலுப்படுத்துவதும் முன்மொழிவுகளில் ஒன்றாக இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

பி.ஜெ. நாயக்

பி.ஜெ. நாயக்

ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் தலைவரான பி.ஜெ. நாயக்-ன் தலைமையில் இந்தியாவிலுள்ள வங்கிகளின் நிர்வாகங்களைப் பற்றி மறு ஆய்வு செய்யும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த குழுவை அமைத்திருந்தது. இந்த கமிட்டி வங்கிகளில் அரசின் பங்குகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்கலாம் என்ற பரிந்துரையுடன் சேர்த்து, பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது.

முதலீட்டு குறைப்பு

முதலீட்டு குறைப்பு

மூலதனத்தை உயர்த்தும் விஷயத்தைப் பொறுத்த வரையில், நிதியமைச்சகம் விளக்கமான ஒரு வரைவு திட்டத்தைக் கொண்டு வர உள்ளது. இது ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் பொதுத் துறை வங்கிகளில் முதலீட்டு குறைப்பு நடவடிக்கைகளை இந்த வரைவில் கொண்டு வந்து விடும்.

ரூ.2,40,000 கோடி தேவை

ரூ.2,40,000 கோடி தேவை

'பேஸல் 3 (Basel III) அல்லது மூன்றாவது பேஸல் ஒப்பந்தப்படி (Third Basel Accord), அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2,40,000 கோடிகள் தேவைப்படும். நடப்பு நிதியாண்டிலேயே அரசு இரண்டு அல்லது மூன்று பொதுத் துறை வங்கிகளில் மூலதனத்தைக் குறைக்கும்' என்றும் திரு.சாந்து குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt rejects Nayak panel view to cut govt stake in banks below 50%

The government today said it has rejected P J Nayak committee recommendations of lowering government holding in banks below 50 percent even as it is considering other suggestion on providing greater autonomy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X